தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 17 augustus 2013

புலிகளுடனான போரில் இராணுவம் தனது சொந்த நுட்பங்களையே பயன்படுத்தியது: இராணுவ தளபதி

[ சனிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2013, 08:34.27 AM GMT ]

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை இராணுவம் தமது சொந்த நுட்பங்களையே பயன்படுத்தியதாக இராணுவத் தளபதி லொப்டினட் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்தார்.
திருகோணமலையில் நேற்றிரவு நடைபெற்ற கடற்படை மற்றும் கடல்சார் நிறுவனத்தின் புதிய அதிகாரிகளுக்கான பட்டமளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
போரின் போது முன்னேற்றங்ளும், பின்னடைவுகளும் இருந்தன. எதிரிகளுக்கு ஏற்ப தாக்குதல் வியூங்களை கையாண்டோம்.
நாம் ஒரு வட்டத்திற்குள் இருந்து சிந்தித்து, எமது முறைகளை கண்டுப்பிடித்து அதன் அடிப்படையில் வெற்றி பெற்றோம்.
போர் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்துள்ளது. அதன் பின்னர் பல ஆச்சரியமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten