தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 16 augustus 2013

இந்தியாவில் வைத்து வாகனங்களில் குண்டுகளைப் பொருத்த புலிகள் திட்டமிட்டனர் ?

சமாதான காலப்பகுதிக்கு முன்னதாக, இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்களில் (அதாவது அங்கேயா வைத்து) குண்டுகளைப் பொருத்த விடுதலைப் புலிகள் திட்டமிட்டார்கள் என, தற்போது இராணுவத் தடுப்பு காவலில் உள்ள முன் நாள் புலிகள் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவிருந்த வாகனங்களில் C4 ரகக் குண்டுகளை பொருத்தி பின்னர் அது இலங்கை வந்தவுடன் அதில் முக்கியமான நபர்கள் பயணிக்கும் வேளை அதனை வெடிக்க வைக்க புலிகள் முயற்சிகளை மேற்கொண்டார்கள் என்றும், அதற்கான அதி நவீன சாதனங்களை புலிகள் இறக்குமதி செய்திருந்தார்கள் என்று குறிப்பிட்ட முன் நாள் புலிகள் உறுப்பினர் இராணுவத்திடம் தெரிவித்துள்ளாராம்.

தற்சமயம் இராணுவத்தின் பிடியில் உள்ளதாகக் கூறப்படும், புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த நபரே மேற்படி பல தகவல்களை வெளியிட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது. வெளிநாட்டில் வசிக்கும் முகுந்தன் என்பவர் தொடர்பாகவும், புலிகளுக்கு வாடகை வாகங்களை பெற்றுகொடுத்தவர்கள் தொடர்பாகவும் மற்றும் யாழில் வசித்து வருவதாகக் கூறப்படும் மற்றுமொரு புலிகளின் முக்கிய்ஸ்தர் பற்றியும் இவரே தொடர்ந்து தகவல்களை வெளியிட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம்.

Geen opmerkingen:

Een reactie posten