தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 13 augustus 2013

வவுனியா பல்கலைக்கழக வளாக மாணவர்களிடையே முறுகல் நிலை! சிலர் படுகாயம்!


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களை தாக்கியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்ககோரி பிரயோக விஞ்ஞான பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியா வளாகத்தில் மாணவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு சென்ற சில வவுனியா வளாக வர்த்தக பீட மாணவர்கள் அங்கிருந்த மாணவர்கள் மீது சராமரியாக தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதன்காரணமாக நான்கு பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் காயமடைந்ததுடன் இருவர் வவுனியா மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா வளாக நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களால் குருமன்காட்டில் உள்ள அவர்களது வளாகத்திற்கு முன்பாக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அதனையடுத்து பேரணியாக சென்ற மாணவர்கள் மன்னார் வீதி வழியாக பூங்கா வீதியில் உள்ள வவுனியா வளாக நிர்வாக பிரிவு கட்டிடத்தின் முன்பாக போராட்டம் நடத்தியுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், தாக்குதல் நடத்திய காடையர் மீது உடனடியாக விசாரணை செய், மது போதையில் தாக்குதல் நடத்தும் அவர்களை இடைநிறுத்து, பல்கலைக்கழக காவலாளியை மாற்று, மூன்று முறை தெரியப்படுத்தியும் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை, ரவுடிகளுக்கு நிர்வாகம் பயமா? போன்ற வாசகங்கள் தாங்கிய சுலோக அட்டைகளை தாங்கியிருந்தனர்.
இதேவேளை, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி எஸ்.குகனேசன் மாணவர்களுடன் கலந்துரையாடியதுடன் இது தொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழி வழங்கியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten