தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 13 augustus 2013

கூட்டுறவு அமைச்சின் 28 வாகனங்கள் தேர்தல் பிரசாரத்தில்!- இந்த அரசாங்கம் மிலேச்சத்தனமாக செயற்படுகின்றது- ஐ.தே.க!


கூட்டுறவு அமைச்சின் 28 வாகனங்கள் தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடமேல் மாகாணசபைத் தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்காக இந்த வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கூட்டுறவு அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் இம்முறை வட மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்றார்.
வாகனங்கள் தேர்தல் பிரச்சாரப் பணிக்காக பயன்படுத்தப்பட்ட காரணத்தினால் வாடகை அடிப்படையில் அமைச்சுப் பணிகளுக்காக வாகனங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
நெல் விற்பனை சபையின் கணனிகள் அரசியல் கட்சி அலுவலகமொன்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது
அரச அதிகாரிகள் தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அரசாங்கம் மிலேச்சத்தனமாக செயற்படுகின்றது- ஐ.தே.க
இந்த அரசாங்கம் மிலேச்சத்தனமாக செயற்படுகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
மக்களின் உரிமை குரல்களை நசுக்க அரசாங்கம் துப்பாக்கித் தோட்டாக்களை பயனப்டுத்துகின்றது.
மக்கள் மீது கரிசனை கொண்ட அரசாங்கம் என பிரச்சாம் செய்த போதிலும் இந்த அரசாங்கம் மக்கள் விரோத செயல்களிலேயே ஈடுபடுகின்றது.
ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதனை மூடி மறைப்பதற்காக அரசாங்கம் விசாரணைக் குழுக்களை அமைத்து காலத்தை விரயமாக்குகின்றது.
உலகின் மிகப் பெரிய அமைச்சரவையை பராமரிக்க வேண்டியிருப்பதனால் ஆசியாவின் மிகக் கூடுதலான மின்சாரக் கட்டணத்தை இலங்கை மக்கள் செலுத்துகின்றனர்.
நாட்டில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு ஜனாதிபதி அல்லது பாதுகாப்புச் செயலாளரே தீர்வு வழங்க வேண்டியுள்ளது.இது அரச நிர்வாக கட்டமைப்பில் காணப்படும் பலவீனத்த்தன்மையை பிரதிபலிக்கின்றது.
மாவிலாறு பிரச்சினையின் போது குரல் கொடுத்த ஜாதிக ஹெல உறுமய வெலிவேரிய சம்பவத்தின் போது மௌனம் காத்து வருகின்றது.
வழமை போன்று இந்த சம்பவம் தொடர்பிலும் அரசாங்கம் ஆணைக்குழுவொன்றை அமைத்து விசாரணை நடாத்தும்.
ஆணைக்குழுக்களின் விசாரணை குறித்து நம்பிக்கையில்லை என மக்கள் குறிப்பிடுகின்றனர்.
அரசாங்கம் நகரசபையின் குப்பை லொறி போன்று நாள் தோறும் குப்பைக்ளையே சேகரித்து வருகின்றது என கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten