தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 25 augustus 2013

யாழிற்கு விஜயம் செய்யும் நவி.பிள்ளையை ஏமாற்ற விசேட நிகழ்வுகள்! யாழ்.போதனா வைத்தியசாலையில் இரகசிய கூட்டம்!

தென்னாபிரிக்காவில் வறிய தமிழ் குடும்பத்தில் பிறந்த நவி.பிள்ளை பற்றிய சிறு குறிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 25 ஓகஸ்ட் 2013, 10:04.37 AM GMT ]
இறுதிக்கட்ட போரின் போது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் பலமாக முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீம்பிள்ளை இன்று இலங்கையை சென்றடைந்தார்.
நவநீதம்பிள்ளை தனது இலங்கை விஜயத்தின் பின்னர் வெளியிடப்போகும் அறிக்கை தொடர்பில் தமிழ் தரப்புகள் மத்தியிலும் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியிலும் பலத்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்த நிலையில் நவநீதம்பிள்ளை யார், அவர் பற்றிய ஒரு சிறு குறிப்பு:
நவநீதம்பிள்ளை 1941 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் நாதல் மாகாணத்தின் டேபர்ன் நகரில் ஒரு வறிய குடும்பத்தில் பிறந்தார். தமிழ் வம்சாவளியினரான இவரது தந்தை ஒரு பஸ் சாரதியாக பணியாற்றினார்.
பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் டேர்பனில் வாழும் தமது தமிழ் சமூகத்தின் உதவியுடன் நாதல் பல்கலைக்கழகத்தில் 1963 ஆம் ஆண்டு பீ.ஏ பட்டத்தை பெற்றார்.
சட்டத்தரணியான கொபி பிள்ளை என்பவரை 1965 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்தார்.
1982 ஆம் ஆண்டு ஹாவர்ட் சட்ட பல்கலைக்கழகத்தில் எல்.ஏ.எல்.எம். பட்டத்தை பெற்ற அவர், அதே பல்கலைக்கழகத்தில் 1988ம் ஆண்டு சட்ட விஞ்ஞானத்துறையில் கலாநிதி பட்டத்தை பெற்றார்.
ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் கலாநிதி பட்டம் பெற்ற முதல் தென்னாபிரிக்கர் நவநீதம்பிள்ளையாவார். அத்துடன் தென்னாபிரிக்க உயர்நீதிமன்றத்தின் வெள்ளையர் அல்லாத முதல் நீதிபதி பிள்ளை என்பது முக்கியமானது.
அன்றைய தென்னாப்பிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலா, நவநீதம்பிள்ளையை நீதிபதியாக நியமித்தார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் ருவாண்டா தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைவராகவும் அவர் பணியாற்றினார்.
2008ம் ஆண்டு செப்டம்பர் முதலாம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளராக நியமிக்கப்பட்டார். இன்று வரை அந்த பதவியில் தொடர்கிறார்.

http://www.tamilwin.net/show-RUmryIRZMVfpy.html#sthash.P7oiuQpl.dpuf


யாழிற்கு விஜயம் செய்யும் நவி.பிள்ளையை ஏமாற்ற விசேட நிகழ்வுகள்! யாழ்.போதனா வைத்தியசாலையில் இரகசிய கூட்டம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 25 ஓகஸ்ட் 2013, 06:55.33 PM GMT ]
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நாளை யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள அதேவேளை மிக இரகசியமாக அவரது பயணங்கள் மற்றும் சந்திப்புக்கள் இலங்கை அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இலங்கை மீது போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் நவி.பிள்ளை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இலங்கை வரும் நவி.பிள்ளை அரசாங்கத்தின் முக்கிய தரப்பினர்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி மகிந்த மற்றும் அரசாங்க முக்கியதரப்பினரைச சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இந்நிலையில் நாளை மாலை நவி.பிள்ளை யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளார். இவ்வாறு யாழ் செல்லும்  நவி.பிள்ளை யாழ்.போதனா வைத்தியசாலையில் விசேட சந்திப்பொன்றை நடாத்தவுள்ளார்.

இந்த சந்திப்பினை இலங்கை அரசாங்கமே ஒழுங்கு செய்துள்ளதோடு, இந்த சந்திப்பிற்காகவே கொழும்பிலிருந்து சிங்கள வைத்தியர்கள் சிலரை யாழ்ப்பாணத்திற்கு இன்று அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகின்றது.

இந்த சந்திப்பானது மிக மிக இரகசியாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதில் அபிவிருத்திகள் தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

இந்த சந்திப்பு தொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலையின் உயர்நிர்வாகத்தைச் சேர்ந்த ஒரு சிலர் தவிர வேறொருவருக்கும் அறிவிக்கப்படவும் இல்லை.

இந்த சந்திப்பிலேயே இராணுவத்தினரது அடிவருடிகளான சிவில் சமூகப் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுவர்கள் சிலரும் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் நவி.பிள்ளையை சந்திப்பதை இலங்கை அரசாங்கம் முற்றிலும் தடை செய்துள்ளதோடு இறுக்கமாகவும் இரகசியமாகவும் அவரது பயண ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
http://www.tamilwin.net/show-RUmryIRZMVfq4.html#sthash.yVIIouLl.dpuf

Geen opmerkingen:

Een reactie posten