தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 23 augustus 2013

தபால் மூல வாக்குச் சீட்டுக்கள் தேர்தல் திணைக்களத்தினால் தபால் திணைக்களத்திடம் கையளிப்பு !




தபால் மூல வாக்குச் சீட்டுக்கள் தேர்தல் திணைக்களத்தினால் தபால் திணைக்களத்திடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்குச் சீட்டுக்கள் ஒவ்வொரு மாவட்ட தேர்தல் திணைக்களத்தினால் தபால் திணைக்களத்திடம் கையளிக்கும் நிகழ்வு இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
வடமாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் செப்ரெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இதற்கான தபால் மூல வாக்களிப்புக்கள் 9 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதை அடுத்து இதற்கான நடவடிக்கைகள் தேர்தல் திணைக்களத்தால் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
யாழ் மாவட்டத்தில் 5 இடங்களில் வடமாகாண சபை தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் கையேற்பு நிலையங்கள் தேர்தல் திணைக்களத்தால் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நேற்று அறிவித்துள்ளார்.
இதனடிப்படையில் வேலணை, நெடுந்தீவு, சாவகச்சேரி, சண்டிலிப்பாய், பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலகங்களில் தேர்தல் திணைக்களத்தின் முறைப்பாட்டு நிலையங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRXMVgq1.html#sthash.gJMjmIwQ.dpuf

Geen opmerkingen:

Een reactie posten