தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 24 augustus 2013

ஐ.நா மனித உரிமைக் காரியாலயமொன்றை இலங்கையில் அமைக்க முயற்சி!

இலங்கை இனப்பிரச்சினை தீர்வுக்கு ஊடகவியலாளர் பங்களிப்பு தேவை!- இந்திய செய்தியாளர்
[ சனிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2013, 01:51.51 AM GMT ]
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண ஊடகவியலாளர்கள் தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் இனப்பிரச்சினை சிக்கலான ஒன்றாகவே இருக்கப் போகிறது. இதுவரைக்கும் சிக்கல் நிறைந்த ஒன்றாகவே இருந்தது.
இந்தநிலையில் வடக்கின் அரசியல் கட்சிகள் மற்றும் அரசாங்கத்துக்கு இடையில் தொடர்புகளை ஏற்படுத்தி தீர்வு ஒன்றுகான அடிப்படையை உருவாக்குவதில் ஊடகங்கள் சிறப்பான சேவையை வகிக்க முடியும் என்று ஆந்திர பிரதேஸ் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவரான பாலா பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது அவர் இந்தக்கருத்தை வெளியிட்டார்.
இதேவேளை வடக்குகிழக்கில் இந்திய அரசாங்கம் அமைத்துக் கொடுக்கும் வீடமைப்பு திட்டம் மலையகத்தின் நுவரெலியா, மாத்தளை போன்ற இடங்களில் உள்ள தமிழ் மக்களுக்கும் விஸ்தரிக்கப்படும் என்று தாம் நம்புவதாக பாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.
 http://www.tamilwin.net/show-RUmryIRYMVgrz.html#sthash.TfMi3Uei.dpuf

ஐ.நா மனித உரிமைக் காரியாலயமொன்றை இலங்கையில் அமைக்க முயற்சி!
[ சனிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2013, 02:02.17 AM GMT ]
ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் காரியாலயத்தின் கிளையொன்றை இலங்கையில் அமைக்க முயற்சிக்கப்பட்டு வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கிளைக் காரியாலயமாக இந்த நிறுவனம் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,
எனினும், இவ்வாறான ஓர் காரியாலயத்தை அமைக்க அனுமதியளிக்கப் போவதில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த யோசனைத் திட்டத்தை அரசாங்கம் முற்று முழுதாக நிராகரித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைக் காரியாலயமொன்றை அமைப்பதற்கு சில தரப்பினர் முயற்சி எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRYMVgr0.html#sthash.FbUUSfzz.dpuf

Geen opmerkingen:

Een reactie posten