மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் மனித படுகொலைகள் மற்றும் ஜனநாயக அழிவுகளுக்கு எதிராக ஜப்பானின் டோக்கியோ நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த உள்ளதாக இலங்கையின் ஜனநாயகத்திற்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது,
மீண்டும் ஒரு ரத்துபஸ்வல வேண்டாம். ராஜபக்ஷ ஆட்சியாளர்கள் படுகொலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும்.
மாடுகளை கொலை செய்யப்படுவதை நிறுத்தும் முன்னர் மனிதர்கள் கொலை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளது.
இலங்கையில் இடம்பெறும் படுகொலைகளை உடனடியாக நிறுத்த கோரி நடத்தப்படும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நாளைய தினம் நடைபெறவுள்ளது.
பிற்பகல் 3 மணிக்கு டோக்கியோவின் சினகாவா தக்கனவா பொலிஸ் நிலையத்திற்கு எதிரில் ஆரம்பமாகும் பேரணி டோக்கியோவில் இலங்கை தூதரகம் நோக்கி செல்ல உள்ளது.
தூதரகத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இலங்கையின் ஜனநாயகத்திற்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten