தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 25 augustus 2013

குழந்தையின் நச்சு கொடியை சாப்பிட்ட பிரபல நடிகை !

குழந்தையின் நச்சு கொடியை பிரபல நடிகை சமைத்து சாப்பிட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஒக்லகோமா நகரை சேர்ந்த கிம் கர்தஷியான், தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோ நடத்தி வருகிறார்.
இவருக்கு கடந்த ஜீன் மாதம் 15ம் திகதி பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இவர் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது, குழந்தை பிறந்தவுடன் தனது உடல் நலத்துக்காக அதனுடன் வெளியான நச்சு கொடியை சமைத்து சாப்பிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில், தனது சமையல்காரர் சரோன் என்பவரிடம் குழந்தை பிறந்தவுடன் அதனுடன் சேர்ந்து வெளியாகும் நச்சு கொடியை(பிளாசன்டர்) எப்போதாவது சமைத்தது உண்டா? ஏனெனில் அதை சாப்பிடலாம் என்றார்.

அதற்கு சரோன், அதுபோன்ற ஸ்பெஷல் உணவை நான் இதுவரை சமைத்தது இல்லை, ஆனால் எனது மனைவி சமைத்து இருக்கிறார் என்றார்.
இந்நிலையில் கிம் நச்சுக்கொடியை சாப்பிட்டது உண்மைதானா என்ற கேள்வி சந்தேகத்தை வலுவடையச் செய்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten