தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 14 augustus 2013

திருமலை மாணவர்கள் கொலை! கைதான படைவீரர்களின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

வெலிக்கடை சிறைக்கைதிகள் நால்வர் திருச்சி சிறைச்சாலைக்கு மாற்றம்!
[ புதன்கிழமை, 14 ஓகஸ்ட் 2013, 02:52.16 AM GMT ]
இலங்கையின் வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு தமிழக கைதிகள் தமிழகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக பொலிஸாரின் பாதுகாப்புடன் இரண்டு பெண் கைதிகள் உட்பட்ட நான்கு பேரும் நேற்று ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமானத்தி;ல் அழைத்து செல்லப்பட்டு பின்னர் திருச்சியின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டனர்.
இந்திய இலங்கை நாடுகளுக்கு இடையிலான சிறைக்கைதிகள் மாற்று உடன்படிக்கையின்கீழ் இவர்கள் தமிழகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
போதைவஸ்து உட்பட்ட குற்றங்களுக்காக கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்களில் இருவர்; தமது தண்டனைக்காலமான சுமார் 10 வருடங்களில் பாதிகாலத்தையும் சிலர் பெருமளவு காலத்தையும் கழித்துள்ளனர்.
இந்தநிலையில் மீதமுள்ள தண்டனைக் காலம் முடியும் வரை இவர்கள் தமிழக சிறைகளில் தடுத்து வைக்கப்படவுள்ளனர்.

திருமலை மாணவர்கள் கொலை! கைதான படைவீரர்களின் விளக்கமறியல் காலம் நீடிப்பு
[ புதன்கிழமை, 14 ஓகஸ்ட் 2013, 03:01.42 AM GMT ]
2006 ம் ஆண்டு திருகோணமலையில் 5 மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 12 அதிரடிப்படை வீரர்களின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை நீதிவான் ஏ.எல். அஸ்ரா இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
இந்தநிலையில் ஒரு சந்தேகநபர் மேன்முறையீடு செய்வதற்காக சிறைச்சாலை ஆணையாளரின் ஆலோசனையை பெறுவதற்கான அனுமதியை நீதிவான் வழங்கினார்.
2006 ஆம் ஆண்டு ஜனவரி 2ம் திகதியன்று திருகோணமலை கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த 5 மாணவர்களையும் கொலை செய்த குற்றச்சாட்டே 12 படைவீரர்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட மாணவர்களில் ஒருவரின் தந்தையான டாக்டர் காசிப்பிள்ளை மனோகரன் தமது மகன் உட்பட்டவர்களின் கொலைகளுக்கு நீதி பெற்றுத் தரப்பட வேண்டும் என்று கோரி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten