தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 14 augustus 2013

இலங்கைக்கு செல்வதாக கூறிச் சென்ற கணவரை தேடித்தருமாறு பெண் ஒருவர் மனுத்தாக்கல்

விரிவுரைகளை ஆரம்பிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய யாழ்.பல்கலை.மாணவர்கள்
[ புதன்கிழமை, 14 ஓகஸ்ட் 2013, 03:46.10 AM GMT ]
யாழ்.பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைக் கழக சித்திரமும் வடிவமைப்பு துறையினைச் சேர்ந்த 2ம், 3ம், 4ம் வருட மாணவர்கள் எந்தவிதமான அறிவுறுத்தலும் வழங்கப்படாமல் காலவரையறையாக நிறுத்தப்பட்டிருக்கும் விரிவுரைகளை ஆரம்பிக்கக் கோரி நேற்று அடையாளப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நண்பகல் 1.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வடையாளப் போராட்டமானது மலை 4.30 மணிவரைக்கும் தொடர்ச்சியாக இடம்பெற்றது.
எனினும் யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் நடைபெற்ற இம்மாணவர்கள் போராட்டத்தினை யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் கண்டுகொள்ளவே இல்லை. எனினும் தமக்கான நீதி வழங்கப்படும்வரைக்கும் போராட்டம் தொடர்ச்சியா மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
இதுமட்டுமல்லாமல் “ 20 நாட்களுக்கும் அதிகமாக கைவிடப்பட்ட எமது கல்வியின் நிலை என்ன?, எதிர்கால கனவை கலைக்காதே, புதுமுக மாணவர்களாகிய எமது நிலை என்ன?, பிரித்தாளும் தந்திரம் கல்விமான்களுக்கு அல்ல, சிறப்பான முறையில் இயங்கிள துறை கலக்கத்தில்” என்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை கைகளில் ஏந்திய வண்ணம் அமைதியான முறையில் மாணவர்கள் தமது போராட்டத்தினை நடாத்தியிருந்தனர்.
இவ்விடயம் தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது,
கலைப்பீட வகுப்புக்கள் அனைத்தும் கடந்த 23ம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. ஆயினும், கடந்த 21 நாட்களாக விரிவுரையாளர்கள் எவரும் வருகை தருவது இல்லை. அலுவலகமும் மூடப்பட்டுள்ளது. இதனால் எமக்காக வகுப்புக்கள் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை. இதனையடுத்து எமது இணைப்பாளரும் பதவி விலகிச்சென்றுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக நிர்வாகத்திடம் பலதடவை முறைப்பாடுகள் செய்துள்ளளோம். ஆனாலும் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
விரிவுரைகள் மீள ஆரம்பிப்பதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை. இதனால் மாணவர்கள் அனைவரும் உளவியல் ரீதியில் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர்.
விரிவுரைகள் மீள ஆரம்பிக்கப்படாதது ஏன்? எமது துறை சார்ந்த பொருத்தமானதொரு இணைப்ப்hளரை வழங்குமாறு கேட்டுக்கொள்வதோடு, எமக்கான நல்லதோர் தீர்வை நியாயமான முறையில் பெற்றுத்தர வேண்டும்.
எதிர்வரும் காலத்திலும் எதுவித பிரச்சினைகள் இன்றியும் கற்றல் செயற்பாடுகளை தொடர்வதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கைக்கு செல்வதாக கூறிச் சென்ற கணவரை தேடித்தருமாறு பெண் ஒருவர் மனுத்தாக்கல்
[ புதன்கிழமை, 14 ஓகஸ்ட் 2013, 03:36.53 AM GMT ]
இலங்கைக்கு செல்வதாக கூறிச்சென்ற பெண் ஒருவரின் கணவரை அடையாளம் காணப்பதற்காக அவரை திருச்சிராப் பள்ளியில் உள்ள மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லுமாறு சென்னை மேல் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
தமது கணவரான ராஜகோபால் என்பவர் 2011 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளியின் ஊடாக இலங்கைக்கு செல்வதாகக கூறி சென்ற போதும் பின்னர் வீடு திரும்பவில்லை.
எனவே அவரைக் கண்டு பிடித்து தருமாறுக்கோரி அவரின் மனைவியான கோமலதா ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது பொலிஸாரின் தகவல்படி போதைவஸ்து குற்றங்களுக்கான திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யோகராஜா எனப்படும் ராஜகோபால் என்பவர் மனுதாரரின் கணவரா? என்பதை அடையாளப்படுத்துமாறு நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டது.
இதற்காக நீதிமன்றத்தின் அனுமதியுடன் மனுதாரர் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்படவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Geen opmerkingen:

Een reactie posten