தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 13 augustus 2013

அரோ ஹரா சொல்லச் சொல்ல சிங்களவர்கள் நகைகளை திருடினார்கள் !




யாழில் வருடா வருடம் நடைபெறும் பெரு விழாக்களில் , நல்லூர் கந்தன் கொடியேற்றமும் ஒன்று. கெடியேற்றம் ஆரம்பித்தால் போதும். பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொள்ளுவார்கள். பெண்கள் தம்மிடம் இருக்கும் நகைகளை மற்றும் விலை உயர்ந்த சாரிகளை காட்ட அதனை உடுத்திக்கொண்டு செல்வது வழக்கம். இதேபோல அங்கே கொள்ளையட்டிக்க என்று ஒரு கோஷ்டி அந்த நாள் முதல் செயல்பட்டு வருகிறது.(அதுவேறு விடையம்) . ஆனால் தற்போது தென்னிலங்கையில் இருந்து யாழ் வந்து குடியேறியுள்ள சிங்களவர்களும் இதனை ஒரு குறியாக வைத்து செயல்பட ஆரம்பித்துள்ளார்கள். நேற்றைய தினம் மட்டும் கெடியேற்றத்துக்குச் சென்ற பல பெண்களின் நகைகள் கொள்ளையடியப்பட்டுள்ளது. இதில் தமிழ் பெண் ஒருவரின் செயினை பறித்த சிங்கள இளைஞர் ஒருவரும் வசமாக மாட்டியுள்ளார். 

பக்திப் பரவசத்தில் தமிழ்ப் பெண்கள் அரோ ஹரா சொல்ல , பக்கத்தில் சமயம் பார்த்து காத்திருந்த பல சிங்கள இளைஞர்களும், யுவதிகளும் தமிழ்ப் பெண்களின் கழுத்தில் இருந்த நகைகளைப் பதம் பார்த்துக்கொண்டு சென்றுவிட்டனர். நேற்று மட்டும் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை வைத்துப்பார்த்தால், சுமார் 1 கிலே தங்கம் களவாடப்பட்டுள்ளது என அறியப்படுகிறது. இதனையடுத்தே நல்லூர் கோவிலுக்குச் செல்லும் பெண்கள் நகைகளை அணியவேண்டாம் என்று, இன்றைய தினம் பொலிசார் வெளிப்படையாகவே அறிவித்தல் விட்டுள்ளார்கள் என்றால் பாருங்களே. நேற்றைய தினம் தற்செயலாகவே ஒரு சிங்கள கள்வன் மாட்டியிருக்கிறான். ஆனால் அங்கு நின்ற பலர் நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றுவிட்டனர் என சில பக்த்தர்கள் தெரிவித்துள்ளார்கள்.

பிடிபட்ட சிங்கள கள்வனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து என்ன பயன். அங்கே இருக்கும் சிங்களப் பொலிசார் என்ன அக்ஷனா எடுக்கப்போகிறார்கள் ?

Geen opmerkingen:

Een reactie posten