தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 16 augustus 2013

வாகனம் வாங்கித் தருவதாக ஆதிவாசிகளின் தலைவரையும் ஏமாற்றியது அரசாங்கம்!

விபச்சாரிகளை காலையில் கைது செய்யும் பொலிஸார் மாலையில் விடுதிகளுக்கு அழைத்துச் செல்வதாகக் குற்றச்சாட்டு
[ வெள்ளிக்கிழமை, 16 ஓகஸ்ட் 2013, 11:33.58 AM GMT ]
கொழும்பில் உள்ள சில பொலிஸார் காலையில் விபச்சாரத்தில் ஈடுபவர்களை கைது செய்தாலும் இரவில் தமது முச்சக்கர வண்டிகளில் விடுதிகளுக்கு அனுப்பி வைப்பதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதி மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
விபச்சாரிகளையும் போதைப் பொருட்களையும் ஏற்றி செல்வதாக எப்பொழுதும் முச்சக்கர வண்டி சாரதிகள் மீதே குற்றம் சுமத்தப்படுகிறது. ஆனால் இன்று கொழும்பு புறக்கோட்டையில் எத்தனை பொலிஸார் முச்சக்கர வண்டிகளை ஓட்டுக்கின்றனர்?.
இந்த பொலிஸார் மாலையில் தமது பகுதி நேர தொழிலாக முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு விடுகின்றனர். இவர்கள் இரவில் விபச்சாரிகளை விடுதிகளுக்கு அழைத்துச் செல்கின்றனர். இது பொலிஸ் சீருடைக்கு செய்யும் அவமரியாதை.
காலையில் விபச்சாரிகளை கைது செய்து கூண்டில் அடைத்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துகின்றனர். மாலையில் விபச்சாரிகளை ஏற்றி செல்கின்றனர்.
முச்சக்கர வண்டி தொழில்துறை மீது எப்போதும் குற்றம் சுமத்தப்படுகிறது. தொழிலுக்காக முச்சக்கர வண்டியை ஓட்டும் சாரதிகள் இதனை செய்வதில்லை.
விபச்சாரிகளையும் போதைப் பொருட்களையும் ஏற்றிச் செல்ல வேறு முச்சக்கர வண்டிகள் இருக்கின்றன. சிலர் கஞ்சா போன்ற பொருட்களை பஸ்களில் எடுத்து வந்து முச்சக்கர வண்டிகளில் தேவையான இடத்திற்கு கொண்டு செல்கின்றனர்.
முச்சக்கர வண்டி சாரதிகள் பயணிகள் பொதிகளை சோதனையிட மாட்டார்கள். அவர் வாடகைக்கு அவர்களை அழைத்து செல்வதை மட்டுமே செய்கிறார். இறுதியில் முச்சக்கர வண்டி சாரதியே குற்றவாளி. முச்சக்கர வண்டி மீதுதான் சகல குப்பைகளும் கொட்டப்படுகின்றன என்றார்.
வாகனம் வாங்கித் தருவதாக ஆதிவாசிகளின் தலைவரையும் ஏமாற்றியது அரசாங்கம்!
[ வெள்ளிக்கிழமை, 16 ஓகஸ்ட் 2013, 12:05.52 PM GMT ]
புதிய வாகனம் ஒன்றை தருவதாக கூறி அரசாங்க அதிகாரிகள் ஆதிவாசிகளை ஏமாற்றியதாக ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியல எத்தா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வாகனத்தை வழங்குவது தொடர்பில் கலாசார அமைச்சரும் அதிகாரிகளும் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
ஆதிவாசிகளின் தலைவரின் பயணத்திற்காக வாகனம் ஒன்றை வழங்குவதாக கலாசார அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க 2012 ஆம் ஆண்டு உறுதி வழங்கியிருந்தார்.  அந்த வாகனம் கடந்த 9 ஆம் திகதி வழங்கப்படும் என தெரிவித்த போதும், வாகனம் இதுவரை வழங்கப்படவில்லை.
ஆதிவாசிகள் தின கொண்டாட்டத்தின் போது நான்கு லட்சம் ரூபாவுக்கு வெற்றிலை மற்றும் பாக்குகளை வழங்கியதாக அமைச்சர் ஏக்கநாயக்க தெரிவித்திருந்தார். ஆனால் அதனை கேகாலையில் இருக்கும் எனது உறவினரே வழங்கியிருந்தார் என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten