தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 14 augustus 2013

முரணான நியமிப்புகளை கிழக்கு மாகாண கல்வி அமைச்சு நிறுத்த வேண்டும்!- ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

சேவை பிரமாணங்களுக்கும் ஆட்சேர்ப்புத் திட்டங்களுக்கும் முரணான நியமிப்புகளை கிழக்கு மாகாண கல்வி அமைச்சு உடன் நிறுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சு சேவைப் பிரமாணங்களுக்கும். ஆட்சேர்ப்புத் திட்டங்களுக்கும் முரணாக நியமனங்களை வழங்கியுள்ளதை கல்வி அமைச்சின் செயலாளருடனான நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
குறித்த சந்திப்பு தொடர்பாக ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளை செயலாளர் பி.உதயரூபன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
பொதுச் சேவை ஆணைக்குழுவின் 1589/30 இலக்கமிடப்பட்ட அதிவிஷேட வர்த்தமானியின் நியமிப்பு 31ம் பிரிவிற்கும் அறிவுறுத்தல்களுக்கும் முரணாக 2014ம் ஆண்டு அமுலுக்கு வரும் வகையில் சம்மாந்துறை கல்வி வலயத்தில் பதில் வலயக் கல்விப் பணிப்பாளர் நியமிக்கப்பட்டிருப்பதையும் சேவை மூப்பினைக் கருத்திற் கொள்ளாமலும் 1225/32 இலக்கமிடப்பட்ட கல்வி நிருவாக சேவை பிரமானங்களுக்கு முரணாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் நியமிக்கப்பட்டிருப்தையும் ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கிழக்கு மாகாணத்திலுள்ள பெரும்பாலான வலயங்களில் கணித பாட மட்டம் மிகவும் பின்தங்கி காணப்படுகின்ற நிலையில் விஷேட ஆளணி சேர்ப்பு (கணிதம்) தெரிவு செய்யப்பட்டு நியமனம் பெற்ற இலங்கை கல்வி நிருவாக சேவையைச் சேர்ந்த ஒருவர் 1589/30 இலக்கமிடப்பட்ட அதிவிஷேட வர்த்தமானி 29ம் பிரிவிற்கு முரணாக வலய பிரதிக் கல்விப் பணிப்பாளார் (நிருவாகம்) பதவிக்கு கல்குடா வலயத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு கல்வி வலயத்தில் பயிற்றப்பட்ட ஆசிரியர் தரம் 2-ஐ ஐச் சேர்ந்த ஒருவர் நாடகமும் அரங்கியலும் பாடத்திற்குரிய உதவிக் கல்விப் பணிப்பாளராக 2012 முதல் செயற்படும் வண்ணம் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியர் பட்டதாரிகளையும் முதுமானிப் பட்டதாரிகளையும் மேற்பார்வை செய்வதோடு சேவை பிரமாணங்களுக்கு முரணாக சலுகைகளை பெற்றுக் கொள்வதை சிரேஷ்ட ஆசிரியர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாக ஆசிரியர் சங்கம் கருதுகின்றது.
ஏறாவூர்ப் பற்று கோட்டக் கல்வி அதிகாரியின் நியமிப்பு சேவை மூப்பு கல்வித் தகைமையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை.
மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மண்முனை வடக்கு கோட்டத்தில் வகிமா/கஅ/2004/01 இலக்கமிடப்பட்டதும் 2004/09/07 திகதியிடப்பட்ட மாகாண கல்வி அமைச்சின் சுற்றறிக்கைக்கு முரணாக மாகாண கல்வி அமைச்சின் நிருவாகத்திலுள்ள பிரபல கல்லூரின் அதிபர் 1AB பாடசாலைக்குரிய கல்வித் தகைமையற்றவராக சுமார் 30 வருடங்களாக சேவை புரிவதோடு, அவரின் சேவை நீடிப்பு தொடர்பாக மாகாண கல்வி அமைச்சு வகை கூறல் வேண்டும் எனவும் பாடசாலைகளில் தரத்திற்கும் அதிபர்களின் தரம் கல்வித் தகைமைகளுக்கு ஏற்ப அதிபர்கள் நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழுவின் பரிந்துரையின் 9.225 பிரிவின் கிழக்கு மாகாண ஆளுநரினால் அண்மையில் வெளியிடப்பட்ட சட்டத் தொகுப்பின் 1990ம் ஆண்டின் 28ம் இலக்க மாகாண திருத்தச் சட்டத்தின்படி சட்ட விதிகளுக்கு அமையவும் நியாய பூர்வமாகவும் உண்மைத் தன்மையுடனும் வெளிப்படைத் தன்மையுடனுமான நடைமுறைகளை மேற்கொள்வதற்கு அதிகாரங்கள் கையளிக்கப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என இலங்கை ஆசிரியர் மட்டக்களப்பு மாவட்ட கிளை செயலாளர் பி.உதயரூபன் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

Geen opmerkingen:

Een reactie posten