வடக்குத் தேர்தல் நிலைமைகள் குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வட மாகாண சபைத் தேர்தலுக்கு பொறுப்பாக அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவே நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வடக்குத் தேர்தல் விடயம் குறித்து அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
வடக்கில் ஐந்து மாவட்டங்களிலும் தேர்தல் அலுவலகங்களை ஆளும் கூட்டணி ஆரம்பித்து விட்டது. தேர்தல் வாக்களிப்பு நிலையங்களுக்கான பிரதிநிதிகளை நியமிக்கும் செயற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன.
தற்போது சிறியளவிலான பிரசாரக் கூட்டங்களை நடத்தி வருகின்றோம். இம்மாதம் 25ம் திகதியுடன் அந்த செயற்பாடு முடிவடைந்ததும் வீடு வீடாக சென்று பிரசாரப் பணிகளை முன்னெடுப்போம்.
அனைத்து வீடுகளுக்கும் செல்வதற்கு திட்டமிட்டுள்ளோம். அதன் பின்னரே வடக்கில் பிரதான பிரசாரக் கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
வடக்கில் ஐந்து மாவட்டங்களிலும் பிரதான பிரசாரக் கூட்டங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
என்னதான் அரசாங்கம் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொண்டாலும் வடக்கு மக்கள் கூட்டமைப்புக்கே வாக்களிக்கும் போக்கு காணப்படுவதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு நிலைமை இல்லை. மக்களுக்கு நாங்கள் விடயங்களை தெளிவுபடுத்தி வருகின்றோம்.
அரசாங்கம் வடக்கில் விரைவான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. எனினும் வடக்கில் மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளன. ஆனால் மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர முடியாத நிலையில் மக்கள் உள்ளனர். குறிப்பாக விதவைப் பெண்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன.
எனவே ஆளும் கூட்டணியின் வேட்பாளர்கள் மக்களின் பிரச்சினைகளை கண்டறிவதில் அதிக ஆர்வம் செலுத்துகின்றனர். அந்த வகையில் வடக்கில் யார் அர்ப்பணிப்புடன் உள்ளனர் என்பது மக்களுக்கு நன்றாக தெரிந்த விடயமாகும். எனவே மக்களின் ஆதரவு எமக்கு உள்ளது என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten