தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 14 augustus 2013

பொலிஸ் சோதனை சாவடியில் திடீரென முளைத்த நாமலின் கட்சி காரியாலயம் - முதலமைச்சர் யார் என்பதை மக்களே தீர்மானிப்பர்: நாமல் !

புத்தளம் நகரத்தில் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக பஸ் நிலைய வளாகத்தில் இயங்கி வந்த பொலிஸ் சோதனைச்சாவடி ஒன்று அகற்றப்பட்டு அதில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவால் நேற்று செவ்வாய்க்கிழமை இந்த அலுவலகம் திறக்கப்பட்டதாக கபே இயக்கம் கூறுகிறது.
இந்த அலுவலகம் அமைந்துள்ள இடம் புத்தளம் நகர சபைக்குச் சொந்தமான கட்டிடமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச சொத்தில் இவ்வாறு கட்சி அலுவலகம் திறப்பது அரச சொத்துக்களை அநாவசியமாக பயன்படுத்தும் குற்றச்செயல் என தேர்தல் கண்காணிப்பு இயக்கமான கபேயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து புகைப்பட ஆதாரத்துடன் தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிட்டுள்ளதாகவும் அரச சொத்துக்களை பயன்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்வதை கண்டிப்பதாகவும் கீர்த்தி தென்னகோன் குறிப்பிட்டார்.
மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களில் தேர்தல் பிரசாரங்களுக்கு அரச சொத்துக்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தினார்.
இவ்வாறான தேர்தல் சட்ட விதிகளை மீறும் செயற்பாடுகள் குறித்து புகைப்பட ஆதாரங்களுடன் தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் ஊடகங்களுக்கு தொடர்ந்தும் தகவல் வழங்கப்படும் என கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.http://www.tamilwin.net/show-RUmryISYMVlw2.html
வடமேல் மாகாண சபையின் முதலமைச்சர் யார் என்பதை மக்களே தீர்மானிப்பர்: நாமல் ராஜபக்ஷ
நாடாளுமன்றத்தில் தற்போது அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிகளவான உறுப்பினர்கள் அம்பாந்தோட்டை மாவட்டத்துடன் உறவு முறைகளை கொண்டவர்கள் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
புத்தளம் ஆராச்சிக்கட்டு பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் அம்பாந்தோட்டை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். புத்தளம் மாவட்டத்தின் காலநிலையும் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் காலநிலையும் சமனானது.
மக்களின் வாழ்க்கையும் இரண்டு மாவட்டங்களிலும் சரிசமமானதாகவே இருக்கின்றது. தென் மாகாண சபையாக இருந்தாலும் வடமேல் மாகாண சபையாக இருந்தாலும் இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் முதலமைச்சர்கள் பதவிகள் இதுவரை கிடைக்கவில்லை.
அம்பாந்தோட்டை மாவட்டத்தினர் அதனை கோர மாட்டார்கள். தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிகளவானவர்கள் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் உறவினர்கள் என்பது இதற்கு காரணமாக இருக்கலாம்.
வடமேல் மாகாண சபையின் முதலமைச்சர் யார் என்பது முடிவு செய்யப்படவில்லை. அந்த முடிவை மக்களே எடுப்பார்கள் என்றார்.
இதேவேளை, வடமேல் மாகாண சபையின் முதலமைச்சர் பதவி தனக்கு வழங்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்தன் காரணமாகவே ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி துறந்து விட்டு, இந்த தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடதக்கது.

Geen opmerkingen:

Een reactie posten