தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 16 augustus 2013

100 கிலோவுக்கும் மேற்பட்ட கஞ்சாவுடன் இராணுவ மேஜர் கைது! மனைவியை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

மோட்டார் சைக்கிள் மீது பஸ் வண்டி மோதியதில் ஸ்தலத்திலேயே ஒருவர் பலி!- பளையில் சம்பவம்
[ வெள்ளிக்கிழமை, 16 ஓகஸ்ட் 2013, 01:09.57 PM GMT ]
பளையில் இன்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் பயணிகள் பஸ் வண்டியுடன் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.
வரலக்ஷ்மி பூஜை வழிபாடுகள் இரட்டைக்கேணி அம்மன் கோவிலில் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
அவரை அவசரமாக வைத்தியசாலைக்கு மோட்டார் சைக்கிளில் இருவர் எடுத்துச் சென்றுள்ளனர்.
சிகிச்சையின் பின்னர்  திரும்பவும் பளை நோக்கி வந்து கொண்டிருக்கையில், தலைக்கவசம் அணிந்திராத பயத்தினால் பொலிஸாரை கண்டவுடன் வேறு ஒரு பாதைக்கு திருப்ப முனைந்திருக்கின்றனர்.
இந்நிலையில் அவர்களின் பின்னால் வந்து கொண்டிருந்த பயணிகள் பஸ் வண்டி மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பளை பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
குறித்த விபத்தினால் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மூன்றாவது நபர் சிறு காயங்களுடன் தப்பித்துக் கொண்டதாகவும் அறிய முடிகிறது.
மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
100 கிலோவுக்கும் மேற்பட்ட கஞ்சாவுடன் இராணுவ மேஜர் கைது! மனைவியை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!
[ வெள்ளிக்கிழமை, 16 ஓகஸ்ட் 2013, 01:26.27 PM GMT ]
பெரும் தொகை கஞ்சா போதைப் பொருளுடன் இராணுவ மேஜர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக அனுராதபுரம் பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனுராதபுரம் வடக்கு இராணுவ முகாமில் இரண்டு மூடை கஞ்சாவுடன் இந்த இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமத்திய மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தின் விசேட நடவடிக்கை பிரிவினால் இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டதுடன் அவரது காரும் கைப்பற்றப்பட்டுள்ளது.
100 கிலோ கிராமுக்கும் மேற்பட்ட தொகை கஞ்சா போதைப் பொருள் இரண்டு மூடைகளில் இருந்தது என பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன.
மனைவியை தாக்கியதாக கூறப்படும் அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் கான்ஸ்டபிள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
மனைவியை தாக்கிய அமைச்சரவை பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
மனைவியை தாக்கி அவரது பல்லை உடைத்ததாக கூறப்படும் பாலித சேனாநாயக்க என்ற இந்த பொலிஸ் கான்ஸ்டபிளை எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தளை நீதவான் சம்பத் கமகே உத்தரவிட்டார்.
பாடசாலை ஆசிரியையான அவரது மனைவி வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

Geen opmerkingen:

Een reactie posten