தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 25 augustus 2013

ஊடகவியலாளரின் வீட்டில் இடம்பெற்ற சம்பவத்துக்கும் இராணுவத்திற்கு தொடர்பில்லை: இராணுவப் பேச்சாளர்

குழந்தையைக் கொல்லப் போவதாக மிரட்டி நகைகள் கொள்ளை!- வரணியில் சம்பவம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 25 ஓகஸ்ட் 2013, 03:22.16 PM GMT ]
யாழ். தென்மராட்சி, கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரணி வடக்குப் பகுதியில் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு வீடு ஒன்றினுள் உட்புகுந்த திருடர்கள் குழந்தையைக் கொல்லப்போவதாக மிரட்டி சுமார் 10 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
கொடிகாமம் வரணி வடக்கு பகுதியில் வீடு ஒன்றினுள் நள்ளிரவு வேளையில உட்புகுந்த கொள்ளையர்கள் அவ் வீட்டில் வசித்த குழந்தையைக் கொல்லப்போவதாக குழந்தையின் கழுத்தில் கூரிய கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர்.
குழந்தையை விடவேண்டுமாயின் சகல நகைகளையும் தருமாறு அச்சுறுத்தியுள்ளனர்.
குழந்தையின் உயிரைக் காப்பாற்றும் நோக்குடன் இவ் வீட்டில் வசித்தவர்கள் சுமார் 10 பவுண் தங்க நகைகளை கொள்ளையர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRZMVfq2.html#sthash.ho8RYFL5.dpuf

ஊடகவியலாளரின் வீட்டில் இடம்பெற்ற சம்பவத்துக்கும் இராணுவத்திற்கு தொடர்பில்லை: இராணுவப் பேச்சாளர்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 ஓகஸ்ட் 2013, 02:20.25 PM GMT ]
ஊடகவியலாளர் மந்தனா இஸ்மையில் அபேவிக்ரமவின் வீட்டில் இடம்பெற்ற சம்பவத்துடன் இராணுவத்தை சம்மந்தப்படுத்திய சுமத்தும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.
பம்பலப்பிட்டி டிகமன் வீதியில் உள்ள சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளரின் வீட்டிற்குள் சென்ற கொள்ளையர்கள் இராணுவத்தின் கூலி படையினர் என சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டு தொடர்பில் பதிலளிப்பதற்காக கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட சாமர குமார, அசங்க உதயசிறி ஆகிய சந்தேக நபர்கள் இராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் உறுப்பினர்கள். அவர்கள் தற்போது இராணுவத்தில் பணியாற்றவில்லை.
அவர்களில் ஒரு மூன்று வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தை விட்டு சென்றவர் ஒருவரும் உள்ளார். மற்றைய நபரும் இராணுவத்தில் இருந்த தப்பிச் சென்றவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் இராணுவத்தில் இருந்து சட்டரீதியாக விலகாமல் தப்பிச் சென்ற நபர். உயிரிழந்த நபரும், இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற அவரது சகோதரரும், மற்றுமொரு சகோதரரும் இந்த கொள்ளை குழுவில் உள்ளனர்.
சில ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின் படி இவர்கள் அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் பணியாற்றிய இராணுவத்தினர் அல்ல. இது முற்றிலும் பொய்யான செய்தி.
இச்சம்பவம் தொடர்பில் கவலை தெரிவிக்கும் அதேவேளை இராணுவத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை முற்றாக மறுக்கின்றோம் என்றார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRZMVfqy.html#sthash.fY3OD4E1.dpuf



Geen opmerkingen:

Een reactie posten