தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 24 augustus 2013

நவநீதம்பிள்ளை பிரச்சினையை உருவாக்குவாரே தவிர தீர்வு காண மாட்டார்!- டக்ளஸ் தேவானந்தா

தொண்டா - திகாம்பரம் மோதல் உக்கிரம்: சமரசத்தில் ஜனாதிபதி நேரடியாக தலையீடு
[ சனிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2013, 05:52.49 AM GMT ]
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் தேசிய தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்டுள்ள மோதல்கள் வரம்பு மீறி செல்ல இடமளிக்க கூடாது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு கட்சிகள் இடையில் இப்படியான மோதல்கள் ஏற்படுவது அரசாங்கத்திற்கு நல்லதல்ல எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை இரண்டு கட்சிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் ஜனாதிபதியிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் அமைச்சர் தொண்டமான் இந்த பிரச்சினை தொடர்பில் இதுவரை எந்த பதில்களையும் வழங்கவில்லை என அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவித்தன.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தேசிய தொழிலாளர் சங்கம் என்பன ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் நுவரெலியா மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடுகின்றன.
அமைச்சர் தொண்டமானின் ஆதரவாளர்கள் சிலர், ஹட்டனில் அமைந்துள்ள தேசிய தொழிலாளர் சங்கத்தின் தேர்தல் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்தே இந்த மோதல்கள் உருவாகின.
இந்த சம்பவம் தொடர்பாக திகாம்பரம் செய்த முறைப்பாட்டின் பிரதியை தருமாறு கோரி, அமைச்சர் தொண்டமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தலவாக்கலை பொலிஸ் நிலையத்திற்கு சென்று ரகளையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஜனாதிபதி தலையிட்டு இரண்டு தரப்பினரையும் சமாதானப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் தொடர்ந்தும் மோதல்களை ஏற்படுத்தி கொள்ள வேண்டாம் எனவும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.
 http://www.tamilwin.net/show-RUmryIRYMVgs3.html#sthash.kkGNNXFm.dpuf


நவநீதம்பிள்ளை பிரச்சினையை உருவாக்குவாரே தவிர தீர்வு காண மாட்டார்!- டக்ளஸ் தேவானந்தா
[ சனிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2013, 06:06.46 AM GMT ]
ஐ.நா சபை மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு வரவுள்ளதாக அறிகின்றோம். அவர் வரலாம், போகலாம். இங்கு வந்து பார்த்து பிரச்சினைகளையும் அறியலாம். ஆனால் குழப்பங்களை உருவாக்கி பிரச்சினைகளை ஏற்படுத்தாது இருக்க வேண்டும் என அவரைக் கோருவதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
513வது படையிரால் பயன்படுத்தப்பட்டு வந்த பொதுமக்களது வீடுகள் காணிகள் அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை சுன்னாகத்தில் இடம்பெற்றது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
யுத்த சூழலில் தவிர்க்க முடியாத காரணங்களால் தான் மக்களுடைய சொத்துக்கள் இராணுவத்திரால் பயன்படுத்தப்பட்டது.
எனினும் அவை தற்போது மீளவும் கையளிக்கப்பட்டு வருகின்றது.
எனினும் எமது அரசில் பாதுகாப்பு உயர்வலயம் என்பது இருக்க முடியாது.
தென்னிலங்கையைப் போல பாதுகாப்புக் காரணங்களுக்காக படை முகாம்கள் இருப்பதும் தவிர்க்க முடியாது.
எமது பிரச்சினையினை நாமே தீர்க்க வேண்டும். வெளியில் இருந்து வந்து யாரும் தீர்வு காண முடியாது.
அவ்வாறு இருந்தால் எப்போதோ பிரச்சினைக்கு முடிவு கட்டப்பட்டிருக்கும்.
மேலும் ஐ.நா சபை மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு வரவுள்ளதாக அறிகின்றோம்.
அவர்கள் வரலாம், போகலாம். நிலைமைகளைப் பார்த்து அறியலாம். இங்கு பிரச்சினைகளை உருவாக்கக் கூடாது.
எனினும் எமது பிரச்சினைக்கு அவரால் தீர்வு காண முடியாது. அவர்கள் பிரச்சினையை உருவாக்குவார்களே தவிர தீர்வு காண மாட்டார்கள் என்றார்.
http://www.tamilwin.net/show-RUmryIRYMVgs5.html#sthash.p7h0zR39.dpuf

Geen opmerkingen:

Een reactie posten