தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 17 augustus 2013

சிலாபத்தில் ஓய்வு பெற்ற அதிபர் படுகொலை! மகன் மீது சந்தேகம் என பொலிஸார் தெரிவிப்பு!

மதுபோதையில் செலுத்திய உழவு இயந்திரம் தடம்புரண்டது! இருவர் படுகாயம்! யாழில் சம்பவம்
[ சனிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2013, 12:11.52 PM GMT ]
யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உழவு இயந்திரம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதில் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து இன்று சனிக்கிழமை பி.ப 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
உழவு இயந்திரத்தை சாரதி  அதிவேகமாக செலுத்தி வந்து சந்தியில் திருப்ப முற்படுகையிலேயே வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாகவும் படுகாயமடைந்த இருவரும் மதுபோதையில் காணப்பட்டதாகவும் சம்பவ இடத்திலுள்ளவர்கள் தெரிவித்தனர்.

சிலாபத்தில் ஓய்வு பெற்ற அதிபர் படுகொலை! மகன் மீது சந்தேகம் என பொலிஸார் தெரிவிப்பு!
[ சனிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2013, 01:07.50 PM GMT ]
சிலாபம் பிரதேசத்தில் 76 வயதுடைய ஓய்வுபெற்ற அதிபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிலாபம் பிரதேசத்தில் உள்ள காக்காப்பள்ளி எனும் பகுதியிலேயே இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தையடுத்து கிடைத்த தகவலையடுத்து குறித்த இடத்திற்குச் சென்ற பொலிஸார் அவவர் வசித்து வந்த வீட்டிலிருந்து அவரது சடலத்தை கைப்பற்றியுள்ளனர்.
குறித்த ஓய்வுபெற்ற அதிபர் தனது வீட்டில் தனியாகவே வசித்து வந்துள்ளார் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
இக்கொலைக்கான காரணம் என்ன என்பது தொடர்பிலோ கொலையாளி தொடர்பான விபரங்களோ இதுவெரை கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், கொலை செய்யப்பட்டவரின் மூத்த மகன் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தற்சமயம் பிரதேசத்தை விட்டு தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்டவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சிலாபம் பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten