[ ஞாயிற்றுக்கிழமை, 25 ஓகஸ்ட் 2013, 11:06.34 AM GMT ]
படையினருடன் சம்பந்தப்பட்டவர்களின் இந்த நடவடிக்கையால் தமது பிரசார பணிகளுக்கு தடைகள் ஏற்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் பிரதிநிதிகள் தேர்தல் ஆணையாளரிடம் அறிவித்துள்ளனர்.
இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையாளர் இந்த விடயம் தொடர்பில் இராணுவத் தளபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதியளித்துள்ளார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRZMVfpz.html#sthash.IMprPVWd.dpufஇதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையாளர் இந்த விடயம் தொடர்பில் இராணுவத் தளபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதியளித்துள்ளார்.
கொமன்வெல்த் மாநாடும் புலனாய்வு அறிக்கையும்!
[ ஞாயிற்றுக்கிழமை, 25 ஓகஸ்ட் 2013, 09:48.25 AM GMT ]
கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என்பதை மன்மோகன் சிங் உறுதிப்படுத்தவும் இல்லை.
வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் கொடுத்த அழைப்பை அவர் நிராகரிக்கவும் இல்லை.
எந்த மட்டத்திலான குழுவை அனுப்புவது என்று இன்னமும் இந்தியா முடிவு செய்யவில்லை என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் அழுத்தங்கள் இந்தியாவுக்கு அதிகளவில் இருக்கின்ற நிலையில் கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது குறித்தோ, அதைப் புறக்கணிப்பது குறித்தோ உடனடியாக எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலையில் மன்மோகன் சிங் அரசாங்கம் உள்ளது.
கொமன்வெல்த் மாநாட்டை முற்றிலும் புறக்கணிக்கும் திட்டத்தைப் பற்றி இந்தியா இப்போதைக்கு ஆலோசிப்பதற்கான வாய்ப்புக்களே இல்லை.
கடந்த வாரம் இந்தப் பகுதியில் குறிப்பிட்டது போன்று கொமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதை விட அதைப் பயன்படுத்தி இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுப்பதே நல்லது என்ற கருத்தே இந்திய அரசிடம் வலுவாக உள்ளது.
அவ்வாறு மாநாட்டை முழுமையாகப் புறக்கணிப்பது இந்திய வெளிவிவகாரக் கொள்கையைச் சிக்கலாக்கி விடும் என்று சவுத் புளொக் கொள்கை வகுப்பாளர்களும், அதற்கு வெளியில் இருந்து ஆலோசனை கூறுவோரும் கருதுவதாகத் தெரிகிறது.
இத்தகைய நிலையில் தமிழ்நாட்டின் கடுமையான எதிர்ப்புகளையும் பொருட்படுத்தவோ மாநாட்டை முழுமையாகப் புறக்கணிக்கும் திட்டம் குறித்து யோசிக்கவோ இப்போதைக்கு இந்திய அரசு நேரத்தைச் செலவிடாது.
கொழும்பில் மாநாடு நடப்பதற்கு இன்னமும் கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களுக்கு மேல் உள்ளது.
அதற்குள் தெளிவானதொரு முடிவை எடுக்க இந்தியாவுக்குப் போதிய கால அவகாசம் உள்ளது.
இதனால் இப்போது தமிழ்நாட்டில் இருந்து கிளம்பும் எதிர்ப்புக்களை மத்திய அரசு அவ்வளவாக கண்டுகொள்ளப் போவதில்லை.
ஆனால் கொழும்கு மாநாட்டை முற்றிலும் புறக்கணிக்கும் கோரிக்கையைப் பலவீனப்படுத்த மத்திய அரசோ அதன் முகவர் அமைப்புக்களோ முயற்சிக்கலாம்.
இந்திய வெளிவிவகாரக் கொள்கை வகுப்பாளர்களின் மத்தியில் கொழும்பு செல்வது முக்கியமானது என்ற கருத்து மேலோங்கியிருந்தால் இத்தகைய நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தநிலையில் கடந்த புதன்கிழமை ரைம்ஸ் ஒவ் இந்தியா ஒரு செய்தியை வெளியிட்டு பெரம் பரபரப்பை உருவாக்கியிருந்தது.
வெளியே பார்த்தால் இதற்கும் கொமன்வெல்த் மாநாட்டுக்கும் என்ன தொடர்பு என்றும், மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் போடும் முடிச்சைப் போலவும் தோன்றலாம்.
ஆனால் பல சமயங்களில் அரசியல் இராஜதந்திரங்களும், புலனாய்வுத் தந்திரோபாயங்களும்கற்பனைக்கும் எட்டாதவையாக இருப்பதுண்டு.
தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் தாக்குதல் நடத்தும் நோக்கில் லஷ்கர் ஈ தொய்பா அமைப்பைச் சார்ந்த எட்டுப் பேருக்கு பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர்களின் தாக்குதல் இலக்கு மதுரை அல்லது மயிலாடுதுறை என்றும் ரைம்ஸ் ஒவ் இந்தியா குறிப்பிட்டிருந்தது.
இலங்கை வழியாகவே ஊடுருவி இந்தத் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும், இதற்கு சிங்கள மீனவர்களின் உதவி பெறப்படலாம் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவில் தரையிறங்கலாம் என்றும் கூறிய அந்தப் புலனாய்வு எச்சரிக்கையை மை்ஸ் ஒவ் இந்தியா பெற்றுக் கொண்டது மும்பை பொலிஸ் மூலம் தான்.
ஆனால் அந்த எச்சரிக்கையை விடுத்தது மத்திய உள்துறை அமைச்சின் கீழ் செயற்படும் வி.ஐ.பி பாதுகாப்பு பிரிவு என்ற புலனாய்வு முகவர் அமைப்பாகும்.
இலங்கைக் கடவுச்சீட்டு மூலம் தமிழ் நாட்டுக்கும் கேரளாவுக்கும் சென்று வந்த மூன்று பாகிஸ்தானியர்கள் கடந்த பெப்ரவரியில் கொழும்பில் பிடிக்கப்பட்டதை அடிப்படையாக வைத்தே பெரும்பாலும் இந்த 9 பக்க எச்சரிக்கைக் குறிப்பை மாநிலங்களுக்கு அனுப்பியிருந்தது வி.ஐ.பி பாதுகாப்பு பலனாய்வுப் பிரிவு.
இந்தியாவில் உள்ளகப் புலனாய்வுப் பிரிவான ஐ.பி. வெளியகப் புலனாய்வுப் பிரிவான றோ என்பன இருக்கும் நிலையில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது வி.ஐ.பி. பாதுகாப்பு பிரிவேயாகும்.
எதற்காக றோவும், ஐபியும் இதுபற்றி எச்சரிக்கவில்லை? சிலவேளைகளில் அவற்றுக்கு இந்த தகவல் கிடைக்காமல் போயிருக்கலாம்.
இந்தியாவில் மத்திய அரசின் கீழ் செயற்படும் பல்வேறு புலனாய்வுப் பிரிவுகள் ஒன்றிணைந்து செயற்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பாதுகாப்புத்துறை வல்லுனர்களிடம் நீண்டகாலமாகவே இருந்து வருகிறது.
இத்தகைய சூழலில் இந்த விவகாரத்தில் ஏனைய புலனாய்வுப் பிரிவுகளுடன் தகவல்கள் பரிமாறப்பட்டிருக்க வாய்ப்பில்லை.
ஆனால் இந்தச் செய்தி வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக லஷ்கர் ஈ தொய்பா போன்ற இயக்கங்களுடன் விடுதலைப் புலிகள் ஒருங்கிணைந்து செயற்படக்கூடும் என்ற எச்சரிக்கையை ஐபி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இலங்கை வழியாக தமிழ்நாட்டில் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்ற எச்சரிக்கை அப்போது வெளியாகவில்லை.
கொமன்வெல்த் மாநாட்டுக்கான அழைப்பு மன்மோகன் சிங்கிடம் கையளிக்கப்பட்ட நிலையில் தான் இந்த விவகாரமும் வெளியே கிளம்பியுள்ளது.
அதுவும் இந்தச் செய்தி தமிழ்நாட்டில் இருந்து வெளியே கசிய விடப்பட்டிருக்கவில்லை. மும்பையில் இருந்தே கசிந்தது.
வி.ஐ.பி. பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பாக உள்ள உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷின்டே முன்னாள் மராட்டிய முதல்வர்.
ஆனால் தமிழ்நாட்டில் தாக்குதல் நடக்கலாம் என்று கருதப்பட்ட தென்தமிழ்நாடு பொலிசுக்கு இத்தகைய எச்சரிக்கைகள் ஏதும் விடுக்கப்பட்டிருக்கவில்லை.
தென்மண்டல பொலிஸ் ஐஜி அபய்குமார் சிங் மத்திய புலனாய்வு அமைப்புகளிடம் இருந்து இத்தகைய எச்சரிக்கைகள் ஏதும் வரவில்லை என்றுகூறியிருந்தார்.
ஆனால் மதுரை எஸ்.பியான சஞ்சய் மாத்தூர், சுதந்திரதின காலப்பகுதியில் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு மத்திய புலனாய்வு அமைப்புக்களிடம் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் சுதந்திரதினம் கொண்டாடப்பட்ட ஓகஸ்ட் 15ம் திகதி தாக்குதல் நடத்தப்படலாம் என்று இந்தியா முழுவதிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.
அந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கும் வி.ஐ.பி. பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவு வெளியிட்டுள்ள எச்சரிக்கைக்கும் வேறுபாடுகள் உள்ளன.
அதாவது, மன்மோகன் சிங்கிடம் கொமன்வெல்த் மாநாட்டு அழைப்பிதழ் கையளிக்கப்பட்டுள்ள சூழலில் தமிழ்நாட்டில் மாநாட்டைப் புறக்கணிக்க வலியுறுத்தும் கருத்து தீவிரம் பெற்று வந்த நிலையில் தான் இந்த எச்சரிக்கை வெளியானது.
அதுதமட்டுமன்றி இந்த எச்சரிக்கையை அடுத்து இந்தியா கொமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கக்கூடாது என்றும் முழுஅளவில் பங்குபற்றிப் பேசி முடிவெடுக்க வேண்டும் என்றும் இந்திய ஊடகங்கள் சில வலியுறுத்த ஆரம்பித்துள்ளன.
எங்கிருந்து கொமன்வெல்த் புறக்கணிப்புக் கோரிக்கை எழுந்ததோ அங்கேயே அச்சுறுத்தலை உருவாக்கி அத்தகைய கோரிக்கையை வலுவிழக்கச் செய்யும் முயற்சியாக இந்த எச்சரிக்கை வெளியாகியிருக்கலாம்.
இந்தியாவின் புலனாய்வுத் தகவல் பொய்யானது என்றும் தமிழ்நாட்டின் மீது தாக்குதல் நடத்த இலங்கையைத் தளமாகப் பயன்படுத்த இடமளிக்கப்படாது என்றும் இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமன்றி இந்திய இலங்கை பாதுகாப்பு உறவுகளை கெடுக்கும் முயற்சி என்றும் இலங்கைப் பாதுகாப்பு வட்டாரங்கள் கூறியுள்ளன.
இந்நிலையில் தான் இந்த எச்சரிக்கைக்கான காரணம், பின்னணி குறித்த கேள்விகள் எழுகின்றன.
பொதுவாகவே புலனாய்வு அமைப்புகள் தாக்குதல்கள் நடக்கலாம் என்று எச்சரிக்கைகள் விடுத்தாலும் அவர்கள் எச்சரிப்பது போல நடந்து விடுவதில்லை.
அதேவேளை வேறொரு உள்நோக்கத்தை அடிப்படையாக வைத்தும் இத்தகைய எச்சரிக்கைளை புலனாய்வு அமைப்புகள் விடுவதுண்டு.
இப்போது விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை இவற்றில் எத்தகையது?
ஹரிகரன்
http://www.tamilwin.net/show-RUmryIRZMVfo7.html#sthash.JSKxaeej.dpuf
Geen opmerkingen:
Een reactie posten