தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 25 augustus 2013

யாழிற்கு விஜயம் செய்யும் நவி.பிள்ளையை ஏமாற்ற விசேட நிகழ்வுகள்! யாழ்.போதனா வைத்தியசாலையில் இரகசிய கூட்டம்!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நாளை யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள அதேவேளை மிக இரகசியமாக அவரது பயணங்கள் மற்றும் சந்திப்புக்கள் இலங்கை அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இலங்கை மீது போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் நவி.பிள்ளை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இலங்கை வரும் நவி.பிள்ளை அரசாங்கத்தின் முக்கிய தரப்பினர்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி மகிந்த மற்றும் அரசாங்க முக்கியதரப்பினரைச சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இந்நிலையில் நாளை மாலை நவி.பிள்ளை யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளார். இவ்வாறு யாழ் செல்லும்  நவி.பிள்ளை யாழ்.போதனா வைத்தியசாலையில் விசேட சந்திப்பொன்றை நடாத்தவுள்ளார்.

இந்த சந்திப்பினை இலங்கை அரசாங்கமே ஒழுங்கு செய்துள்ளதோடு, இந்த சந்திப்பிற்காகவே கொழும்பிலிருந்து சிங்கள வைத்தியர்கள் சிலரை யாழ்ப்பாணத்திற்கு இன்று அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகின்றது.

இந்த சந்திப்பானது மிக மிக இரகசியாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதில் அபிவிருத்திகள் தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

இந்த சந்திப்பு தொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலையின் உயர்நிர்வாகத்தைச் சேர்ந்த ஒரு சிலர் தவிர வேறொருவருக்கும் அறிவிக்கப்படவும் இல்லை.

இந்த சந்திப்பிலேயே இராணுவத்தினரது அடிவருடிகளான சிவில் சமூகப் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுவர்கள் சிலரும் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் நவி.பிள்ளையை சந்திப்பதை இலங்கை அரசாங்கம் முற்றிலும் தடை செய்துள்ளதோடு இறுக்கமாகவும் இரகசியமாகவும் அவரது பயண ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 

Geen opmerkingen:

Een reactie posten