மேலதிக விபரம் …….
தமிழீழ விடுதலை புலிகளின் புலனாய்வுதுறைபொறுப்பாளர் பொட்டுஅம்மானின் சகோதரர் சண்முகலிங்கம் ஞானகுமார் ஜவயது 52 ஸஇஅரியாலை நாயன்மார்கட்டு வதிவிடமாகக் கொண்டவர். இவர் ஜெர்மனியின் குடியுரிமை பெற்று வசித்து வந்தார்.
இவர் 2 மாதங்களுக்கு முன்னர் தாயகத்துக்கு வந்த வேளை சில தினங்களுக்கு முன்னர் இராணுவபுலனாய்வாளர்களால் பல தடவை கடுமையான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக உள மன நிலை பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் காணப்பட்டார். அன்று அவர் வீட்டிலிருந்து வெளியில் சென்று விட்டு தனது வீடு திரும்பிய வேளை நெஞ்சு வலியால் அவதியுற்ற அவர் அயல் வீட்டில் தண்ணீர் வேண்டி அருந்தினார். அதற்கும் குணமாகாததால் அயலவர்கள் வெந்நீர் வழங்கி உள்ளனர். அதன் பின்னரும் மேலும் வலியால் துடித்த அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். மருத்துவமனை மருத்துவர்கள் அவர் மரணம் அடைந்ததாக அறிவித்தனர்.
காலம் தாழ்த்தி வந்தமையே மரணத்திற்கு காரணம் எனவும் இயற்கையான மாரடைப்பாலே மரணம் நிகழ்ந்தது எனவும் மரண விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் அவரது மரணத்தில் இராணுவ புலனாய்வாளர்களின் பால் சந்தேகம் ஏற்படுவதாகவும் திட்டமிட்டசதி எனவும் மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அவரது உடல் இறுதிச் சடங்கிற்காக ஜெர்மன் கொண்டு செல்ல படுவதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten