தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 24 augustus 2013

நவனீதம்பிள்ளையிடம் போர்க் குற்றம் குறித்து கேள்வி எழுப்பப்படும்!– அருண் தம்பிமுத்து


ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையிடம் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் கேள்வி எழுப்பப்படும் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல்வாதிகள் பலர் போர்க் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டுள்ளனர்.
அவர்களுக்கு எதிராக எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படும் என கேள்வி எழுப்புவேன்.
எதிர்வரும் 26ம் திகதி திருகோணமலையில் நவனீதம்பிள்ளையை சந்திப்பேன்.
சுரேஸ் பிரேமசந்திரன், செல்வம் அடைக்கலநாதன் போன்றோர் முன்னாள் போராளிகளாகும்.
அவர்கள் தொடர்பில் யார் நடவடிக்கை எடுப்பார்கள்?
மட்டக்களப்பு நிலைமைகளை பார்வையிடுமாறு நவனீதம்பிள்ளையிடம் கோரியிருந்தோம்.
நேரப் பிரச்சினை காரணமாக அவர் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.
பொலிஸ் அதிகாரங்களினால் ஏற்படக் கூடிய பாதக நிலைமைகள் குறித்தும் நவனீதம்பிள்ளையுடனான சந்திப்பின் போது விளக்கப்படும் என அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகம்மொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 http://www.tamilwin.net/show-RUmryIRYMVgry.html#sthash.aT3MP3qZ.dpuf

Geen opmerkingen:

Een reactie posten