தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 19 augustus 2013

ஆட்களை கடத்தும் முகவர் வாகரையில் கைது

இதுவரையில் 110 முறைபாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது: தேர்தல் ஆணையாளர்
[ ஞாயிற்றுக்கிழமை, 18 ஓகஸ்ட் 2013, 04:58.08 AM GMT ]
வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் தொடர்பில் இதுவரையில் 110 முறைபாடுகள் கிடைக்கபெற்றுள்ளதாக தேர்தல்கள் திணைக்களத்தின் முறைப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. 
நேற்றைய தினம் மாத்திரம் தேர்தல் சட்டங்களை மீறிய 10 சம்பவங்கள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவ்வாறான தேர்தல் முறைபாடுகள் வடமேல் மாகாணத்திலேயே அதிக அளவில் பதிவாகி இருப்பதாக, முறைப்பாட்டு பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அரசாங்க சொத்துக்கள் தேர்தல் பிரசாரங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றமை தொடர்பில் அதிக முறைபாடுகள் கிடைத்துள்ளன.
ஆட்களை கடத்தும் முகவர் வாகரையில் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 18 ஓகஸ்ட் 2013, 05:06.43 AM GMT ]
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு படகில் ஆட்களை அனுப்பி வந்ததாக கூறப்படும் முகவர் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று சனிக்கிழமை இரவு கைது செய்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, வாழைச்சேனை போன்ற இடங்களிலிருந்து சட்டவிரோதமாக படகில் ஆட்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வந்தார் சந்தேகத்தின் அடிப்படையிலேயே இவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இச்சந்தேக நபரை வாகரை, கதிரவெளியில் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

Geen opmerkingen:

Een reactie posten