தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 25 augustus 2013

பக்கசார்பு அதிர்வு தரும் அதிர்வாம்-சிறீலங்கா அரசின் கைக்கூலிகளாகச் சில கனேடியத் தமிழ் பாடகர்கள் ?

வெளிநாடுகளில் தமிழின உணர்வாளர்களின் செயற்பாடுகளை ஒடுக்கும் வகையில் இலங்கை அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றதென்பது ஒன்றும் புரியாத புதிரல்ல. எந்தப் புற்றில் எந்தப் பாம்பு உள்ளதென்பதைக் கண்டறிதல் கடினம் தான். தமிழ் நாட்டிலிருந்தும் வட இந்தியாவிலிருந்தும் கலைஞர்கள் இலங்கைக்குச் சென்று சிங்கள அரசு நடத்துகின்ற இசை நிகழ்ச்சிகளிலும், பிற களியாட்டங்களிலும் பங்குபற்ற முற்படும் போது இனமானமுள்ள இந்தியத் தமிழர்கள் பெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி அவற்றைத் தடுத்து வருகின்றனர். இதற்குப் பல உதாரணங்கள் உண்டு. ஆனால் கனடாவிலோ இலங்கை இனவாத அரசின் தூதரகம் நடத்துகின்ற விழாக்களில் எந்தவிதக் கூச்சமுமின்றி இன மானமற்ற சில கனேடிய தமிழ்ப் பாடகர்கள் பங்குபற்றி வருகின்றனர் என்பது மிக வேதனைக்குரிய ஒன்றாகும். இந்த ஆண்டு பெப்புரவரியில் கனடாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தால் நடத்தப்பட்ட சிறீலங்காவின் சுதந்திர தின விழாவில், பிரபா என்ற ஒரு பாடகரும் சென்ற ஆண்டு நடந்த தீபாவளி நிகழ்ச்சியில் பார்த்திபன் என்ற ஒரு பாடகரும் பங்குபற்றியுள்ளனர். (இவர்கள் பாடும்போது எடுத்த புகைப்படங்களை இங்கே இணைத்துள்ளோம்).



இலங்கைத் தூதரகம் தனது இணையத்தளத்திலும் பிற பத்திரிகையிலும் பிரசுரித்து, கனடாவிலுள்ள தமிழ் மக்கள் தம்பக்கமே உள்ளனரெனவும் தாயகத்தில் தமிழருக்கு எதுவித பிரச்சினையும் இல்லை எனவும் உலகிற்குக் காட்ட முற்பட்டுள்ளது. இதனிலும் வேதனைக்குரிய விடயம் யாதெனில் அண்மையில் கனேடிய தமிழர் பேரவை நடத்திய பெற்னா நிகழ்விற் கூட இனவாத சிறீலங்கா அரசுடன் கைகோர்த்துச் செயற்படுகின்ற மேற்கூறிய இரு பாடகர்களும் பங்குபற்றியுள்ளனர். பெற்னா எனப்படுகின்ற வட அமெரிக்கத் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பானது தமிழ் இனத்தின் மேம்பாட்டிற்கும் தமிழ் மொழியின் வளர்சிக்கும் கடுமையாக உழைத்து வருகின்ற அமைப்பு என்பது பலரும் அறிந்தது. ஆனால் அந்த அமைப்பு அறியாமை காரணமாக கனேடிய தமிழர் பேரவையுடன் கூட்டுச் சேர்ந்து பெற்னா விழாவைக் கனடாவில் நடத்தியதன் விளைவாக அந்த அமைப்பும் இனவாத சிறீலங்கா அரசுடன் சேர்ந்து கொண்டாட்டம் அடித்து வருகின்ற பாடகர்களுக்கு மேடை அமைத்துக் கொடுத்த கொடுமையை நடந்துள்ளது.



மேலும், தமிழ் வன், சி.எம்.ஆர் போன்ற ஊடகங்களும் தெரிந்தோ தெரியாமலோ இவ்வாறானோருக்கு வாய்ப்புக்கள் கொடுத்து இவர்களை வளர்த்து வருகின்றன. அண்மையில் பெரிய சிவன் கோவிலில் நடைபெற்ற ஒரு திருவிழாவிற்கு சிறீலங்காத் தூதரக முக்கியத்துவர்கள் பலர் அழைக்கப்பட்டு பொன்னாடை போர்த்தி மாலை மரியாதையுடன் கௌரவிக்கப்பட்ட கேடுகெட்ட நிகழ்வும் நடந்தேறியுள்ளது. எமது இனத்தைக் கொன்று குவித்து வருகின்றவர்களுக்கு மாலை மரியாதை செய்யுமளவிற்கு இந்த விண்னர்களின் செயற்பாடுகள் உள்ளதென்பதைக் காணும் போது, ஏற்படும் வேதனையை வார்த்தையில் எடுத்துரைக்க முடியாது. இந்த நிகழ்வில் சில தமிழினப் பிரமுகர்களும் கலந்து கொண்டுள்ளனர். இப்படிப்பட்ட கலைஞர்களை அரவணைப்பதும் சிங்கள அரசின் பிரதிநிதிகளை வலிந்து அழைத்து மாலை மரியாதை செய்வதுவும் எம்மினத்தைக் கொன்றொழித்து வருகின்ற இனவாத சிறீலங்கா அரசையே அரவணைப்பதற்கு ஒப்பாகும் என்பதை எவரும் மறுக்க முடியாது.



தாயகத்தில் இன்றுள்ள முப்பெரும் தமிழினத் துரோகிகளில் இறுதியில் சேர்ந்தவரின் பெயரைக் கூறி அனாதைப்பிள்ளைகளின் பராமரிப்புப் பணிக்கென நிதி திரட்டுகின்ற ஒருவர் அண்மையில் பத்திரிகை விளம்பரத்துடன் ஆடம்பரமாகக் கனடாவில் இயங்கத் தொடங்கியுள்ளார். இவர் திரட்டிய நிதி தாயகத்தில் அல்லலுறும் எம் மக்களைச் சென்றடைகின்றதா ? என்பது பெரும் கேள்விக் குறி. பாத்திரமறிந்து மக்கள் பங்களிப்புச் செய்தல் வேண்டும்.
ஈழத் தமிழினம் தமது நியாயமான உரிமைகளைப் பெற்றெடுப்பதற்கு வேறெந்த இனமும் ஆற்றியிருக்க முடியாத அளவிற்கு உயிராலும் உடைமைகளாலும் அர்ப்பணிப்புக்களை ஆற்றியுள்ளது. பல நாடுகளின் கூட்டுச் சதி காரணமாக எமது இனம் ஒரு தற்காலிப் பின்னடைவைச் சந்தித்துள்ள இவ் வேளையில் எமது இனத்தை இலங்கைத் தீவிலிருந்து முற்றாக அழித்தொழிக்கும் முயற்சியில் முனைப்பாகச் செயற்பட்டு வருகின்ற சிறீலங்கா அரசின் கூலிப்படைகளை எமது மக்கள் இனம் கண்டு அவர்களைகளை நீக்கம் செய்தல் இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.

Geen opmerkingen:

Een reactie posten