இதனை மோபைல் போனில் புகுத்தினால், நாம் அவசரத்துக்கு சார்ஜ் செய்ய அலையவேண்டியது இல்லை. மோபைல் போனில் உள்ள பற்றறி வீக் ஆனால், ஒரு பட்டனை அழுத்தினால் போதும். சார்ஜருடன் இணைத்தது போல அது சார்ஜ் செய்ய ஆரம்பித்துவிடும். அதிக மின்சாரத்தை அது உற்பத்திசெய்யாவிட்டாலும் பரவாயில்லை. அவசரத்துக்கு உதவும் வகையில் அது மின்சாரத்தை தயாரித்து பற்றரியை சார்ஜ் செய்யும் திறன் கொண்டது. அதிலும் நாம் நல்ல சிக்கனல் கிடைக்கும் இடங்களில் இருந்தால், உதாரணமாக டவுன் சென்ரர் போன்ற பகுதியில் இருந்தால் அங்குள்ள ரூட்டர்கள், TV சிக்னல்கள் மற்றும் ரேடியோ சிக்னல்களின் கதிர்களை அது பாவித்து மின்சாரத்தை உற்பத்திசெய்துவிடும்.
இதனால் நாம் இனி சார்ஜர் இருக்கும் இடத்தை, அல்லது மின்சாரம் இருக்கும் இடத்தை தேடி அலையவேண்டியதே இல்லை. இதுபோன்ற சாதங்கள் விரைவில் மார்கெட்டில் வர உள்ளது. இது மிகவும் அதிசயமான கண்டுபிடிப்பு தான் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
Geen opmerkingen:
Een reactie posten