தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 16 augustus 2013

வாழ்நாளில் எதிர்க்கட்சியின் அரசாங்கம் ஒன்றை காணமுடியாது: மைத்திரிபால சிறிசேன

பொன்டேரா நிறுவனம் உற்பத்திகளை இலங்கையில் விற்பனை செய்ய நீதிமன்றம் தடை
[ வெள்ளிக்கிழமை, 16 ஓகஸ்ட் 2013, 10:47.59 AM GMT ]
நியூசிலாந்தின் பொன்டேரா நிறுவனம் இறக்குமதி செய்யும் பால் உற்பத்திகளையும் இலங்கையில் விற்பனை செய்ய இடைக்கால தடைவிதித்து கம்பஹா மேலதிக மாவட்ட நீதிபதி இன்று உத்தரவிட்டுள்ளார்.
14 நாட்களுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை தவிர பொன்டேரா நிறுவனம் தமது உற்பத்திகள் தொடர்பில் நுகர்வோரை கவரும் வகையில் செய்து வரும் சிறு வர்த்தக விளம்பரங்களை இடைநிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரச தாதி அதிகாரிகள் சங்கம் தாக்கல் செய்திருந்த மனுவொன்று இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
வாழ்நாளில் எதிர்க்கட்சியின் அரசாங்கம் ஒன்றை காணமுடியாது: மைத்திரிபால சிறிசேன
[ வெள்ளிக்கிழமை, 16 ஓகஸ்ட் 2013, 11:13.13 AM GMT ]
ஐக்கிய தேசியக்கட்சி தேசிய அளவில் மட்டுமின்றி பிரதேச அளவிலும் வலுவிழந்துள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
தம்பதெனிய மாரச்சுமுல்ல பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசியக்கட்சி தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க முடியாத அளவில் வலுவிழந்து போயுள்ளது.
தற்போது அங்குமிங்கும் சத்தமிட்டு எதிர்க்கட்சிகளை ஊடகங்களில் மட்டுமே மக்கள் காணமுடிகிறது. மக்கள் மத்தியில் இல்லாத எதிர்க்கட்சியே தற்போதுள்ளது.
எமது வாழ்நாளில் எதிர்க்கட்சியின் அரசாங்கம் ஒன்றை காமுடியாத நிலைமையே உள்ளது. எதிர்ககட்சித் தலைவரிடம் பலமில்லாதது மட்டும் இதற்கு காரணமல்ல ஜனாதிபதியின் தூரநோக்குடனான சிந்தனைகளும் அதற்கு காரணம் என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten