தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 28 augustus 2013

யாழ் மேயரை துரோகியாக்கி சுட்டவர்கள் தமிழருக்கு தந்தது என்ன??


என்னே ஒரு தற்புகழ்ச்சி,சுய புராணம்,துரையப்பா தமிழர் விடுதலைக்கூட்டணி சொன்னதால் தமிழினத் துரோகியானார்!!ஆனால் அதை தமிழன் சொல்லலாம்!!மலையாளி எப்படி சொல்லமுடியும்!போகட்டும் உண்மையான துரோகிகளை தமிழ் மக்களுக்கு வரலாறு இனம் காட்டும்,அதுவரை தமிழ் இனம் வாழும்!!

யாழ்ப்பாணம் மேயராக இருந்த துரையப்பாவை “தமிழர்களின் துரோகி” என்று குற்றம் சாட்டி, நேருக்கு நேராக நின்று துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார், பிரபாகரன். இந்த சம்பவத்தின் மூலமாகத்தான், பிரபாகரன் பெயர் வெளி உலகுக்குத் தெரிந்தது. அப்போது அவருக்கு வயது 21. பிரபாகரனின் தந்தை பெயர் வேலுப்பிள்ளை. தாயார் பார்வதி அம்மாள். இந்த தம்பதிகளின் நான்காவது குழந்தையாக, யாழ்ப்பாணம் மருத்துவமனையில் 1954 நவம்பர் 26-ந்தேதிபிரபாகரன் பிறந்தார். பிரபாகரனுக்கு மனோகரன் என்று ஒரு அண்ணன். ஜெகதீசுவரி, விநோதினி என்று இரண்டு மூத்த சகோதரிகள். பிரபாகரன்தான் கடைக்குட்டி.

வேலுப்பிள்ளை அரசாங்க வேலையில் (மாவட்ட நில கணக்கீடு) இருந்தார். பிரபாகரன் அண்ணன் மனோகரனும் அரசுப் பணியில் இருந்தார். இரு மூத்த சகோதரிகளும், அரசு ஊழியர்களை மணந்தனர். (பிற்காலத்தில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு மேல் நாடுகளில் தஞ்சம் அடைந்தனர்.) 1958 கலவரத்தின்போது, கொழும்பு நகரில் வசித்து வந்த தமிழர்களின் வீடுகளை சிங்களர்கள் தாக்கினார்கள்; தீ வைத்து கொளுத்தினார்கள். பிரபாகரனின் அத்தை தன் கணவருடன் கொழும்பு நகரில் வசித்து வந்தார். அந்த வீட்டையும் சிங்களர்கள் தாக்கினார்கள். அத்தையின் கண்முன்னே, அவர் கணவரை அடித்துக் கொன்றார்கள். வீட்டுக்கு தீ வைத்து, அத்தையையும் உயிரோடு எரிக்க முயன்றார்கள். தீக்காயம் அடைந்த அத்தை, குழந்தைகளுடன் சுவர் ஏறிக்குதித்து உயிர் தப்பினார்.

பிரபாகரனுக்கு 6 வயதானபோது, சிங்கள மொழித் திணிப்பை எதிர்த்து, செல்வநாயகம் சத்தியாக்கிரக போராட்டம் நடத்தினார். வல்வெட்டித்துறையிலும் தமிழர்கள் அமைதியான முறையில் சத்தியாக்கிரகம் செய்தனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். கலைந்து ஓடியவர்கள் மீது, ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் ஒருவர் குண்டு பாய்ந்து இறந்தார். மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். சிறுவனாக இருக்கும்போதே பிரபாகரனும், அவர் நண்பர்களும் சேர்ந்து கைக்குண்டுகளை தயாரிக்கப் பழகினார்கள். ஒருமுறை பிரபாகரன் கைக்குண்டுகளைத் தயாரிக்கும்போது, எதிர்பாராத விதமாக குண்டு வெடித்து, அவர் காலில் காயம் ஏற்பட்டது. வல்வெட்டித்துறையில், ஊரிக்காடு என்ற இடத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில், பத்தாம் வகுப்பு வரை படித்தார். பின்னர், போராளியாகி விட்டதால், படிப்பைத் தொடரவில்லை. அவர் ரகசிய இயக்கத்தில் இருக்கிறார் என்பதே, அவருடைய பெற்றோருக்குத் தெரியாது.


3 மணிக்கு, போலீசார் வந்து அவர் வீட்டைச் சோதனையிட்டனர். அப்போது பிரபாகரன் வீட்டில் இல்லை. பின்னர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை, பல இடங்களில் தேடி, பிரபாகரன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து அவரை வீட்டுக்கு அழைத்து வந்தார். வீட்டிற்கு வந்த பிரபாகரன், “உங்களுக்கோ, குடும்பத்திற்கோ நான் ஒருபோதும் பயன்பட மாட்டேன். என்னால் உங்களுக்கு எவ்வித தொல்லையும் வேண்டாம். என்னை என் போக்கில் விட்டு விடுங்கள். இனி எதற்கும் என்னை எதிர்பார்க்காதீர்கள்” என்று கூறிவிட்டு, வீட்டை விட்டு வெளியேறினார்.

1972-ம் ஆண்டின் மத்தியில் தனது 17-வது வயதில், “புதிய தமிழ்ப்புலிகள்’‘ என்ற இயக்கத்தைத் தொடங்கினார். யாழ்ப்பாண மேயர் துரையப்பா ஒரு தமிழர் என்றாலும், அவரை தமிழர்களின் பகைவர் என்று பிரபாகரன் கருதினார். உலகத் தமிழ் மாநாட்டில் சிங்கள போலீசார் புகுந்து அட்டூழியம் செய்ததற்கும், துப்பாக்கி சூடு நடந்ததற்கும் அவரே மூலகாரணம் என்று நினைத்தார்.

ஏற்கனவே சிவகுமாரன் என்ற போராளியும், வேறு சிலரும் துரையப்பாவை தீர்த்துக்கட்ட முயன்று, அதில் தோல்வி அடைந்தனர். எனவே, அந்தப் பொறுப்பை தானே ஏற்பது என்ற முடிவுக்கு வந்தார், பிரபாகரன். துரையப்பாவை சுட்டுக் கொல்வது என்று தீர்மானித்தார். பொன்னாலை என்ற இடத்தில் உள்ள வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு, வெள்ளிக்கிழமை தோறும் துரையப்பா வருவது வழக்கம். அது ஒதுக்குப்புறமான இடம். துரையப்பாவை சுடுவதற்கு அதுதான் சரியான இடம் என்று பிரபாகரன் கருதினார். தனக்கு உதவியாக கிருபாகரன், கலாபதி, பற்குணராஜா ஆகிய போராளிகளை தேர்வு செய்தார். திட்டமிட்டபடி நால்வரும் வெள்ளிக்கிழமை காலை, வரதராஜ பெருமாள் கோவிலுக்குச் சென்றனர். துரையப்பாவின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

சற்று நேரத்தில் துரையப்பா காரில் அங்கு வந்தார். கோவிலுக்கு முன்னால் உள்ள மரத்தின் நிழலில் கார் நின்றது. கதவை திறந்து கொண்டு துரையப்பா இறங்கினார். பிரபாகரனும் அவருடைய நண்பர்களும், “வணக்கம் ஐயா” என்று கைகூப்பி வணங்கினார்கள். துரையப்பாவும் பதிலுக்கு வணங்கினார். மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்த பிரபாகரன். துரையப்பாவின் மார்பை நோக்கி சரமாரியாகச் சுட்டார். ஏழெட்டு குண்டுகள் சீறிப்பாய்ந்தன. ரத்தம் பீறிட்டு அடிக்க, கீழே சாய்ந்த துரையப்பா அதே இடத்தில் மரணம் அடைந்தார். துரையப்பாவின் கார் டிரைவரை பிடித்து கீழே தள்ளிவிட்டு, பிரபாகரனும், அவருடைய நண்பர்களும் காருக்குள் ஏறி தப்பிச் சென்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten