தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 17 augustus 2013

யாழ் - கொழும்பு போக்குவரத்துக்காக இரத்மலானையில் தனியான பஸ் நிலையம்

சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மாநகரசபை பிரதி முதல்வரை கைது செய்ய நடவடிக்கை
[ சனிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2013, 06:00.12 AM GMT ]
சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் நுவரெலியா மாநகர சபையின் பிரதி முதல்வரை கைது செய்வதற்காக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சிறுவர் பாதுகாப்பு அதிகாரச் சபையின் விசாரணைப் பிரிவு நேற்றைய தினம் பாதிக்கப்பட்ட ஐந்து சிறுவர்களிடம் வாக்குமூலங்களை பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுவர்களை தகுதியான பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்க அவர்கள் நேற்று நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான பிரதி முதல்வர் முன்னர் வசித்த பிரதேசத்தில் தற்போது இல்லை என்பதால் அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மேற்கொண்டுள்ளது.
யாழ் - கொழும்பு போக்குவரத்துக்காக இரத்மலானையில் தனியான பஸ் நிலையம்
[ சனிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2013, 06:03.53 AM GMT ]
யாழ்ப்பாணம் - கொழும்பு இடையிலான பஸ் போக்குவரத்துச் சேவைகளை ஓரிடத்தில் இருந்து நடத்துவது தொடர்பில் இலங்கை போக்குவரத்துச் சபை கவனம் செலுத்தி வருகிறது.
யாழ்ப்பாணம் - கொழும்பு இடையிலான பயணிகள் போக்குவரத்துச் சேவைக்காக கொழும்பு இரத்மலானை பிரதேசத்தில் தனியான பஸ் நிலையம் அமைக்கப்படவுள்ளது.
இதற்கு போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம இணக்கம் வெளியிட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ரொஷான் குணவர்தன தெரிவித்தார்.
பல இடங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான பஸ் சேவைகள் நடத்தப்படுவதால், அனுமதியின்றி பஸ் சேவைகளை நடத்த அதிகளவான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
இதன் காரணமாக தனியான இடம் ஒன்றில் இருந்து இந்த போக்குவரத்துச் சேவையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Geen opmerkingen:

Een reactie posten