தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 13 augustus 2013

காத்தான்குடியில் போக்குவரத்து விதிகளை மீறிய 200 பேருக்கு சட்ட நடவடிக்கை!


காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கடந்த ஐந்து தினங்களில் போக்குவரத்து சட்ட ஒழுங்குகளை மீறிய 200 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் தலைக்கவசம் அணிந்து செல்லாதவர்கள், மோட்டர் சைக்கிளில் பின் ஆசனத்தில் இரண்டு பக்கமும் கால்களை வைத்து பயணிக்காத பெண்கள் உட்பட போக்குவரத்து சட்ட ஒழுங்குகளை மீறியவர்கள் மீதே இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாதவர்கள் மற்றும் வாகன அனுமதிப்பத்திரம் வைத்திருக்காதவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

Geen opmerkingen:

Een reactie posten