தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 26 augustus 2013

மெட்ராஸ் கபே திரைப்படத்தை திரையிடக்கூடாது! 3 கோடி கையெழுத்து வேட்டை: தமிழக மாணவர் அமைப்பு

ஊடகவியலாளர் மந்தனா வீட்டில் கொள்ளையிட வந்த அனைவரும் அடையாளம் காணப்பட்டனர்
[ திங்கட்கிழமை, 26 ஓகஸ்ட் 2013, 03:20.12 AM GMT ]
சண்டேலீடர் இணை ஆசிரியர் மந்தனா இஸ்மாயில் அபேவிக்கிரமவின் வீட்டில் கொள்ளையிடுவதற்காக வந்ததாக கூறப்படும் 5 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பம்பலப்பிட்டிய பொலிஸார் இதனை அறிவித்துள்ளனர். செய்தியாளரின் வீட்டில் இருந்து கிடைத்த அவசர அழைப்புக்கு இணங்க அங்கு சென்றபோது கொள்ளையர்கள் கத்தி மற்றும் ஆயுதங்களை கொண்டு பொலிஸார் மீது தாக்குதல்களை நடத்தினர்.
இதன்போதே பொலிஸார் துப்பாக்கி தாக்குதலை நடத்தியதாக பம்பலப்பிட்டிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொள்ளையிட வந்தவர்களில் இருவர் இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்றவர்கள் என்று கூறப்படும் நிலையில் அனைவரும் 25- 35 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ் கபே திரைப்படத்தை திரையிடக்கூடாது! 3 கோடி கையெழுத்து வேட்டை: தமிழக மாணவர் அமைப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 25 ஓகஸ்ட் 2013, 08:56.37 PM GMT ]
இந்தியா முழுவதும் மெட்ராஸ் கபே திரைப்படத்தை திரையிடக்கூடாது என்பதை வலியுறுத்தி 3 கோடி கையெழுத்து இயக்கம் நடத்தப்போவதாக சென்னையில் தமிழக மாணவர் அமைப்பு அறிவித்துள்ளது.
சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைப்பெற்ற சந்திப்பில் தமிழக மாணவர் அமைப்பைச் சேர்ந்த லயோலா கல்லூரி மாணவர் பிரிட்டோ கூறியதாவது:-

சிறப்பு காட்சியாக திரையிட்டுக் காட்டப்பட்ட மெட்ராஸ் கபே திரைப்படத்தில் தமிழர்களை இழிவுப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்ததை அடுத்து தமிழக அளவில் படத்தை தியேட்டர் உரிமையாளர்கள் வெளியிடாதற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். 

தமிழர்களுக்கு எதிரான இத்திரைப்படத்தை இந்தியா முழுவதும் வெளியிடக்கூடாது என்பதை வலியுறுத்தியும்,தமிழர்களை எதிரிகளாக சித்தரித்த,முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப் பட்டிருக்காவிட்டாலும்,அரசு அதிகாரிகளால் விசாரணையில் முரணாக நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட,முன்னாள் புலனாய்வு அதிகாரி டி.ஆர்.கார்த்திகேயன்,நிதியமைச்சர் ப.சிதம்பரம்,முன்னாள் புலனாய்வு அதிகாரி எம்.கே.நாராயணன் ஆகிய மூன்று பேரையும்,உண்மை அறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, மக்களிடம் 3 கோடி கையெழுத்து வாங்க இருக்கிறோம் என்று கூறினார்.

சந்திப்பின் போது தமிழக மாணவர் ஒருங்கிணைப்பாளர் மோகன வசந்தன்,செம்பியன் மற்றும் பல்வேறு கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் கலந்து கொணடனர்.  


Geen opmerkingen:

Een reactie posten