[ திங்கட்கிழமை, 19 ஓகஸ்ட் 2013, 02:57.08 AM GMT ]
வகுப்புக்களையோ அல்லது கருத்தரங்குகளையோ நடத்தக் கூடாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மேற்கொண்டு வந்த ஊழல் நடவடிக்கைகளை பொதுமக்களின் முறைப்பாட்டையடுத்து உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஆய்வுக்குழு கண்டுபிடித்துள்ளது.
ஐந்தாம் புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் 25ம் திகதி நடைபெறவுள்ளது.
மாதிரிப் பரீட்டைகள், கருத்தரங்குகள், வகுப்புக்கள், மீட்டல் வகுப்புக்கள் உள்ளிட்ட எந்தவொரு பரீட்சை வழிகாட்டல் நடவடிக்கைகளையும் நாளை முதல் பரீட்சை இடம்பெறும் நாள் வரையில் மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவினை மீறிச் செயற்படுவோர் தொடர்பில் அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் பிரதேச செயலரின் ஊழல் நடவடிக்கைகள் பொதுமக்களினால் அம்பலம்!
[ திங்கட்கிழமை, 19 ஓகஸ்ட் 2013, 01:06.31 AM GMT ]
குறித்த பிரதேசத்தில் இந்திய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட வீடமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்கான மணல் விநியோகம் பிரதேச செயலகத்தின் ஊடாகவே மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பிரதேச செயலர் சொந்தமாக கனரக வாகனங்களை கொள்வனவு செய்து, அவற்றைக் கொண்டு மக்களுக்கு என்ற பெயரில் மணல் கொள்ளையில் தொடர்ச்சியான ஈடுபட்டிருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் தமிழ்வின் இணையத்தளம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்த நிலையில் கடந்த மாதம் மக்கள் இந்த ஊழல்கள் தொடர்பில், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சிற்கு எழுத்து மூலம் குறித்த விடயம் தொடர்பில் தெரியப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு எதுவித அறிவித்தலுமின்றி வந்த விசாரணை அதிகாரிகள் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை வரையில் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றனர்.
இதனடிப்படையில் மக்களுடைய பெயரில் எடுக்கப்பட்ட மணல் மற்றும் சிட்டையில்லாமல் எடுக்கப்பட்ட மணல் ஆகியவற்றில் சுமார் 50 லட்சம் ரூபா மோசடி இடம்பெற்றுள்ளது.
இதனை விசாரணை அதிகாரிகள் உறுதி செய்துள்ளதுடன், இந்த மணல் கொள்ளையில் பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் அதிகாரிக்கும் பெரும் பங்கிருப்பதும், பிரதேச செயலருக்கு சொந்தமாக கனரக வாகனங்கள் ஓடுவதும் கண்டுபிடிக்கப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
எனினும் பிரதேச செயலருக்கும், திட்டமிடல் அதிகாரிக்குமான தண்டனைகள் தொடர்பில் இன்னமும் அறிவிக்கப்படாத நிலையில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே தண்டனை அறிவிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
Geen opmerkingen:
Een reactie posten