இலங்கையில் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் மீது அண்மைக்காலமாக நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம் பிள்ளை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று முற்பகல் நீதியமைச்சில் நடைபெற்ற சந்திப்பின் போது நவனீதம் பிள்ளை அமைச்சர் ஹக்கீமிடம் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
அத்துடன் பேரினவாத அமைப்புக்கள் சில சிறுபான்மை இனங்களுக்கு எதிராக மேற்கொண்டுவரும் பிரசாரங்கள் குறித்தும், அதனை கட்டுப்படுத்தவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம் பிள்ளை கேள்வி எழுப்பியுள்ளார்.
நீதியமைச்சர் மற்றும் முஸ்லிம் மக்களை பிரதி நிதித்துவம் செய்யும் கட்சி ஒன்றின் தலைவர் என்ற வகையிலும் ஹக்கீமிடம் விளக்கம் கோரியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் ஹக்கீம், மதங்களுக்கு எதிரான பிரசாரங்களை கட்டுப்படுத்தவும் அவ்வாறான செயற்பாடுகளை குற்றமாக கருதவும் விசேட சட்டம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளதாகவும் அதற்கான வரைவு அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பள்ளிவாசலகள் மீதான தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதிக்கு முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கையொப்பமிட்டு மஹஜர் ஒன்றினை அனுப்பியுள்ளதாகவும், அதனூடாக நடவடிக்கை எடுக்கப்படும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் மனித உரிமைகள் ஆணையாளரிடம், ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற இந்த சந்திப்பில், பயங்கரவாத தடுப்புச்சட்டம், கருத்துச் சுதந்திரம், காணாமல் போனோர் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர், இராணுவ மற்றும் பொலிஸாருக்கிடையிலான சிக்கல்கள், சட்டம் ஒழுங்கு தொடர்பான புதிய அமைச்சு மற்றும் நல்லிணக்க ஆணிக்குழுவின் பரிந்துரைகளை அமுல் செய்தல் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten