தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 23 augustus 2013

இனம்: இலங்கையில் போரில் சிதைக்கப்பட்ட மனிதர்களைப் பற்றிய திரைப்படம் !

இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தினை மையமாகக் கொண்டு இனம் என்ற திரைப்படம்  படமாக்கப்பட்டு வருகின்றது.
சந்தோஷ் சிவனின் இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் இத்திரைப்படம்  ஆங்கிலத்தில் சிலோன் என பெயரிடப்பட்டுள்ளது.
இது குறித்து திரைப்படத் தயாரிப்பாளரான சந்தோஷ் சிவன் கருத்து தெரிவிக்கையில்,
சில வருடங்களுக்கு முன்பே இனம் திரைப்படம் ஆரம்பிக்கவிருத்தது. எனினும் சில தவிர்க்கமுடியாத காரணங்களால் தள்ளிப் போடப்பட்டது.
இத்திரைப்படத்தில் 15 வயது சிறுவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இனம் திரைப்படத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
ஈழப்போர் 2009-ல் முடிந்திருந்தாலும் இன்றுவரை சமுதாயத்தில் பரபரப்பானதாக இருப்பதால் இலங்கைப் போரை நான் பாரபட்சமற்ற முறையில் அணுகியிருக்கிறேன்.
போரினால் சிதைக்கப்பட்ட மனிதர்களின் ஆசைகளையும் உணர்வுகளையும் மட்டும் படமாக எடுக்கிறேனே தவிர, அதற்கு பின்னால் இருக்கும் அரசியலை அல்ல என்று கூறியிருக்கிறார்.
இனம் திரைப்படம் இலங்கையில் நடந்த போரின் இடையே சிக்கிக்கொள்ளும் நான்கு சிறுவர்களைப் பற்றிய கதை எனத் தெரிவித்துள்ளார்.

- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRXMVgo4.html#sthash.KQcgVABE.dpuf

Geen opmerkingen:

Een reactie posten