இரசாயன பொருள் பரிசோதனைகளுக்கு இலங்கையை பயன்படுத்திக்கொள்ள வேண்டாம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க, நியூசிலாந்திடம் கோரியுள்ளார்.
டி.சீ.டி இரசாயனப் பதார்த்தம் ஆபத்தானதா என்பதனை பரிசோதனை செய்ய இலங்கை குழந்தைகளையோ அல்லது பால் மா நுகர்வாளர்களையோ பயன்படுத்திக் கொள்ள வேண்டாம்.
இவ்வாறான நடவடிக்கைகளை எந்த வகையிலும் எற்றுக்கொள்ள முடியாது. அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறுவனமொன்றின் அறிக்கையை சில பால் மா உற்பத்தி நிறுவனங்கள் விமர்சனம் செய்கின்றமை வருத்தமளிக்கின்றது சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் ஜேன் அன்டர்சனை நேற்று சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தனியார் நிறுவனங்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப் போவதில்லை எனவும், நாட்டின் கீர்த்தி நாமத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் செயற்பட விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten