தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 13 augustus 2013

யாழில் ஆடி அமாவாசை தினத்தில் அதிபரின் வீட்டில் திருட்டு

யாழ்ப்பாணம் யூனியன் கல்லூரி அதிபரின் வீடு திருடர்களால் உடைக்கப்பட்டு திருடப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த ஆடி அமாவாசைத் தினத்தன்று நிகழ்ந்துள்ளது.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
அதிபரும் அவரது மனைவியும் புன்னாலைக்கட்டுவனில் உள்ள வீட்டில் வாழ்கின்ற நிலையில், அதிபரின் மனைவி புத்தூருக்கு சொந்த விடயமாக சென்றவேளை திருடர்களால் கதவுகள் உடைக்கப்பட்டு பெருமளவான பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
ஆயினும் தமது வீடு உடைக்கப்பட்டு திருடப்பட்டு விட்ட நிலையிலும் தமது வீட்டுக்குச் சென்று பார்வையிட முடியாத நிலையில் இருப்பதாக அதிபர் தெரிவித்துள்ளார்.
அவர் தற்போது க.பொ.த உயர்தர பரீட்சை நிலைய இணைப்பாளராக கடமையாற்றுவதால் திருட்டுச் சம்பவம் குறித்து தன்னால் சென்று பார்வையிட முடியாதுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten