மெட்ராஸ் கஃபே படம் தமிழீழ விடுதலை போராட்டத்தை கொச்சைப் படுத்துவதாக உள்ளது, அதனால் திரைப்படத்தை முன்கூட்டியே திரையிட வேண்டும் என தமிழ் அமைப்புகள் காவல்துறை ஆணையரிடம் மனு கொடுத்தார்கள்.
அதை தொடர்ந்து சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பதில் அளித்த ஜான் ஆப்பிரகாம், தமிழ் அமைப்புகள் விரும்பினால் நாங்கள், திரைப்படத்தை முன்கூட்டியே திரையிடுவோம் என்று கூறினார்.
தமிழ் அமைப்புகளும் இதை கேட்டு எங்களுக்கு முன்கூட்டியே திரைப்படத்தை திரையிடுவதற்கு திகதி கொடுங்கள் என்று மீண்டும் காவல்துறையிடம் மனு ஒன்று கொடுத்தார்கள். காவல்துறை திரைப்படக்குழுவிடம் இது குறித்து பேசியபோது, திரைப்படத்தை திரையிட வேண்டும் என்றால் மும்பையில் உள்ள தயாரிப்பாளரிடம் மனு கொடுத்து ரூபாய் 22,000 பணம் கொடுத்தால் முன்கூட்டியே திரையிடுவோம் என்று சொல்லி உள்ளது.
தமிழகத்தில் இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என தமிழர்கள் கோரிக்கை வைக்கின்றனர். ஆனால் திரைப்படக்குழுவோ தமிழர்களிடமே பணம் கொடு, போட்டுக் காண்பிக்கிறோம் என்கிறது.
இது எவ்வளவு பெரிய அயோக்கியத் தனம், தமிழ் அமைப்புகள் விரும்பினால் திரைப்படத்தை திரையிடுவோம் என்று சொல்லிவிட்டு இப்போது எப்படியெல்லாம் நிபந்தனை விதிக்கிறார்கள் இவர்கள். சொன்ன வார்த்தையில் கூட நேர்மையில்லை என தமிழ் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் திரைப்படக்குழுவின் இந்த பதிலை கேட்ட தமிழ் அமைப்புகள் மிகுந்த கொந்தளிப்பில் உள்ளனர். தமிழர்களின் எதிர்ப்பை மீறி இப்படம் திரையிடப்பட்டால், நிச்சயம் திரையரங்குகளை முற்றுகையிடுவோம் என தமிழ் அமைப்புகள், மாணவர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளனர்.
இத்திரைப்படமானது, ஈழ விடுதலை இயக்கம் ஒன்றுக்குள் ஊடுவிய உளவாளியை மையப்படுத்தி திரையாக்கப்பட்டுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வெளியாகவிருக்கும் இத்திரைப்படம் ஈழ விடுதலையை ஆதரிக்கும் "விடுதலை புலிகள்" அமைப்பை தீவிரவாதிகளாகவும், அதிலுள்ள தமிழர்களும் தீவிரவாதிகளாகவும் கேடயமாகவும் காட்டுவதாக தமிழக அமைப்புக்கள் எதிர்ப்புத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
Geen opmerkingen:
Een reactie posten