தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 13 augustus 2013

தேர்தலின் பின்னர் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும்: கயந்த கருணாதிலக்க!

அரசாங்கம் மக்களின் பிரச்சினைகள் மற்றும் துயரங்களை கவனத்தில் கொள்ளாது, குதிரை தப்பியோடிய பின்னர் தொழுவத்தை மூடுவது போல் செயற்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெலிவேரிய சம்பவத்திற்கு காரணமான தொழிற்சாலை இலங்கை முதலீட்டுச் சபைக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது. அத்துடன் வெலிவேரிய சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நியாயம் வழங்கப்படவில்லை.
அந்த மக்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றது.
அரசாங்கம் மக்களுக்கு எதிராக கடுமையான அடக்குமுறைகளை மேற்கொண்டு வருகிறது. இப்படியான அடக்குமுறைகளை அரசாங்கம், சுவாசிலாந்து அல்லது உகண்டாவில் கற்றுக்கொண்டதோ என்று மக்கள் எண்ணுகின்றனர்.
இந்த நிலையில் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் முடிந்த பின்னர், அரசாங்கம் கட்டாயமாக அத்தியவசிய பொருட்களின் விலைகளை மீண்டும் அதிகரிக்கும்.
அமைச்சர்களின் மகன்மார், மருமகன்மாரை மாகாண சபைக்கு அனுப்பி வைக்க அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தற்பொழுது பெரும் சிரத்தை எடுத்துச் செயற்பட்டு வருகின்றனர்.
வெளிப்படையாகவே இவர்கள் அரச வளங்களை தேர்தல் பிரசாரத்திற்பு பயன்படுத்தி வருகின்றனர் என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten