தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 14 augustus 2013

தென் கொரிய பிரதமர் இலங்கைக்கு விஜயம்

இலங்கைப் பெண்ணொருவர் சிங்கப்பூரில் கைது
[ புதன்கிழமை, 14 ஓகஸ்ட் 2013, 10:39.31 AM GMT ]
இலங்கை பெண்ணாருவர் சிங்கப்பூர் குடிவரவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூரில் இருந்து மலேசியா சென்ற லொறி ஒன்றில் சாரதி ஆசனத்திற்கு அருகில் துணியினால் மூடப்பட்டிருந்த பகுதியில் மறைந்திருந்த போதே இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லொறியை துவாஸ் பகுதியில் உள்ள குடிவரவு மற்றும் சோதனை நிலையத்தில் அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சாரதியின் ஆசனத்திற்கு அருகில் துணியினால் மூடப்பட்டிருந்த பகுதியை திறந்து பார்த்த போது பெண்ணொருவர் மறைந்திருப்பது அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
29 வயதான இந்த இலங்கை பெண்ணும் 54 வயதான மலேசியா சாரதியும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் சிங்கப்பூர் குடிவரவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்கப்பூர் குடிவரவு சட்டத்திற்கு அமைய அனுமதிக்காலம் முடிந்து அங்கு தங்கியிருப்பது மற்றும் சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் நுழைவது ஆகிய குற்றங்சளுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கப்படுவதுடன் குறைந்தது மூன்று பிரம்படிகள் வழங்கப்படும்.
அத்துடன் சட்டவிரோதமாக சிங்கப்பூரில் இருந்து வெளியேறும் நபர்களுக்கு 2 ஆயிரம் டொலர் அபராதமும் ஆறு மாத சிறை தண்டனையும் வழங்கப்படும்.
கைது செய்யப்பட்டுள்ள இலங்கை பெண்ணுக்கும், மலேசிய சாரதிக்கும் இந்த தண்டனை வழங்கப்படலாம் என தெரியவருகிறது.
தென் கொரிய பிரதமர் இலங்கைக்கு விஜயம்
[ புதன்கிழமை, 14 ஓகஸ்ட் 2013, 08:51.34 AM GMT ]
தென் கொரியா பிரதமர் ஜுங்-ஹொங்-வோன் ( Jung Hong-won) இந்த மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
அவர் எதிர்வரும் 28 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் 30 ஆம் திகதி வரை அவர் அங்கு தங்கியிருப்பார் எனவும் தென் கொரிய பிரதமரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதேவேளை இலங்கை தொழிலாளர்களுக்கு வழங்கும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்குமாறு இலங்கை தென்கொரியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தென்கொரியாவுக்கு விஜயம் செய்திருந்த போது, அந்த நாட்டின் வெளிவிவகார முதலாவது பிரதியமைச்சர் கிம் கியூ ஹெயூனை சந்தித்த போது இந்த கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten