திடீர் நெஞ்சுவலி! அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் வைத்தியசாலையில் அனுமதி- விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சைக்கு பலனின்றி மரணம்
[ புதன்கிழமை, 14 ஓகஸ்ட் 2013, 08:46.05 AM GMT ]
தம்புள்ள பகுதியில் உள்ள அவரது வீட்டில் முற்பகல் 11 மணியளவில் ஆதரவாளர்களுடன் இருந்த போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கிருந்து கண்டி போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல ஆயத்தப்படுத்தப்பட்ட போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பில் இருந்து அனுப்பிய ஹெலிகொப்டர் மூலம் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சைக்கு பலனின்றி மரணம்
விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர் நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.
காத்தான்குடியிலுள்ள ஷுஹதா வீதியைச் சேர்ந்த முஸ்த்தபா மஹ்றூப் (வயது 44) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் சித்தாண்டி, மாவடிவேம்பு பகுதியில் கடந்த 7ஆம் திகதி இடம்பெற்ற விபத்திலேயே இவர் படுகாயமடைந்தார்.
இந்நிலையில், இவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
காத்தான்குடியிலிருந்து வெலிக்கந்த பிரதேசத்திற்கு ஆடு வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் இவர் தனது மகனுடன் சென்றுகொண்டிருந்தபோதே விபத்து இடம்பெற்றது. இவரது மோட்டார் சைக்கிள் மின்கம்பமொன்றுடன் மோதி விபத்திற்குள்ளானது.
இவ்விபத்தில் தந்தையும் மகனும் காயமடைந்தனர். இவ்விபத்து தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொன்டேரா நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்
[ புதன்கிழமை, 14 ஓகஸ்ட் 2013, 11:13.47 AM GMT ]
தனது பதவி விலகல் தொடர்பில் அவர் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக செய்தி சேவை ஒன்று தெரிவித்தது.
இது சம்பந்தமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி தியோ ஸ்பியரின்க்ஸ், றொமானோ தனது சேவை காலத்தில் அர்ப்பணிப்புடன் சேவை செய்தவர் என தெரிவித்துள்ளார்.
அவரது இந்த முடிவுக்கு மதிப்பளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எனினும் றொமானோவின் பதவி விலகலுக்கான காரணம் என்ன என்பதை பொன்டேரா இதுவரை வெளியிடவில்லை.
பொன்டேரா நிறுவனம் இலங்கைக்கு இறக்குமதி செய்யும் சில பால் மாக்களில் டைசைனமைட் என்ற இரசாயனம் அடங்கியிருப்பதாக உள்நாட்டில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் தெரியவந்ததை தொடர்ந்து இலங்கை சுகாதார அமைச்சு அந்த பால் மாக்களை சந்தையில் இருந்து அகற்றியது.
மேலும், பால்மா தொடர்பான பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடாத்த நியூசிலாந்து அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புபட்ட செய்தி
Geen opmerkingen:
Een reactie posten