ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு, மன்னார், புத்தளம் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் போட்டியிட்டவர்களே இவ்வாறு கட்சியலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
வட மாகாண சபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதென ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்திருந்தது.
எனினும், இந்த தீர்மானத்தை மீறி சில உறுப்பினர்கள் ஆளும் கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளனர். இதன் காரணமாக குறித்த உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் சவூதி அரேபியாவிற்கு விஜயம்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றிரவு சவூதி அரேபியாவுக்கு சென்றுள்ளார்.
அவர் புனித மக்கா நகரில் உம்ரா கடமையையும் நிறைவேற்றுவார். அமைச்சருடன் கிழக்கு மாகாண அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமத்தும் அங்கு சென்றுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten