தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 14 augustus 2013

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்த 2 ஆயிரம் லீற்றர் டீசல் கிணற்று நீருடன் கலப்பு

யாழ்.தீவகத்தின் நீர் நிலைகளில் செத்து மிதக்கும் மீன்கள்!- திடீர் கால நிலை மாற்றத்தின் விளைவு?
[ புதன்கிழமை, 14 ஓகஸ்ட் 2013, 02:46.35 AM GMT ]
யாழ்.தீவகத்திலுள்ள நீர் நிலைகளில் திடிர் திடீரென்று மீன் குஞ்சுகள் இறந்து மிதப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக யாழ்ப்பாணத்தில் அடிக்கடி மழை பெய்வதும் பின்னர் கடும் வெப்பமான கால நிலை ஏற்படுவதுமாக உள்ளது.
இந்நிலையில் தீவத்தின் சில குளங்கள் மற்றும் வற்றாத குட்டைகளில் இருந்த மீன்குஞ்சுகள் இறந்த நிலையில் நீரில் மிதக்க ஆரம்பித்துள்ளன.
இதனால் நீர் நிலைகளில் துர்நாற்றம் வீசுகின்றது. இவ்வாறு மீன்கள் இறப்பதற்கு திடிர் கால நிலை மாற்றமே காரணமென்று தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கடந்த வருடமும் தீவகப்பகுதிகளில் கடும் வரட்சி காரணமாக அதிகளவான விலங்குகள் இறந்திருந்தன.
யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்த 2 ஆயிரம் லீற்றர் டீசல் கிணற்று நீருடன் கலப்பு
[ புதன்கிழமை, 14 ஓகஸ்ட் 2013, 02:37.36 AM GMT ]
யாழ். கல்வியங்காட்டிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட கசிவு காரணமாக அப்பிரதேசத்திலுள்ள பல கிணற்று நீருடன் டிசல் கலந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நிலத்தில் புதைத்திருந்த டீசல் தாங்கி மூலம் 2 ஆயிரம் லீற்றர் டீசல் கசிவடைந்து வீணாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை எரிபொருள் கசிவினை அடுத்த இது தொடர்பாக அப்பகுதியிலுள்ள கிணறுகளில் ஆய்வுகள் நடாத்தப்பட்டு நீரில் டீசல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அண்மையில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீடிரென்று தீப்பற்றி எரிந்து அதிலிருந்த ஒருவரும் படுகாயமடைந்து பின்னர் மரணமாகியிருந்தார்.
அத்தோடு குறித்த நிலையத்தின் முகாமையாளரிடம் 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபா பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

Geen opmerkingen:

Een reactie posten