இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை புறக்கணிக்க கனடா எடுத்துள்ள தீர்மானம் கனடாவை தனிமைப்படுத்தி விடும் என்று ரொறன்ரோ ஸ்டார் இணையத்தளம் தெரிவித்துள்ளது
ரொறன்ரோ ஸ்டார் இணையத்தளத்தில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ள கனேடிய படைத்தள கல்லூரியின் விரிவுரையாளர் அடம் சாப்னிக் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இலங்கையின் மனித உரிமை மீறல்களை கருத்திற் கொண்டு அந்த நாட்டில் நடைபெறும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக கனேடிய பிரதமர் ஹவாட் கடந்த இரண்டு வருடங்களாக அறிவித்து வருகிறார்.
எனினும் அவரின் இந்த அறிவிப்புக்கு அவுஸ்திரேலியா, பிரித்தானியா மற்றும் நியூஸிலாந்து போன்ற நாடுகள் கூட இதுவரை தமது ஆதரவை வெளியிடவில்லை.
இந்தநிலையில் கனடா தமது முடிவில் தனித்து போகக்கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளது.
அத்துடன் கனடாவின் தீர்மானம் இலங்கையில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு காரணமாக இருக்காது என்றும் அடம் சாப்னிக் குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten