தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 14 augustus 2013

'வே புரதம்' தொடர்பாக துரித பரிசோதனை - உள்நாட்டு பால் உற்பத்தியை மேம்படுத்த வலியுறுத்தல் - இலங்கையில் ரசாயன பரிசோதனை வசதியில்லை என்ற குற்றச்சாட்டு மறுப்பு

இம்முறைத் தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை: மஸ்கெலிய மக்கள் - இடதுசாரி அரசியலுக்கு எதிர்காலமில்லை: டீயூ. குணசேகர
[ புதன்கிழமை, 14 ஓகஸ்ட் 2013, 05:38.07 AM GMT ]
இம்முறை மாகாணசபைத் தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என மஸ்கெலிய மக்கள் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த காலத் தேர்தல்களில் அளிக்கப்பட்ட எந்தவொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படாத காரணத்தினால் இவ்வாறான தீர்மானத்தை எடுத்துள்ளதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஒவ்வொரு முறையும் தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுபடும் அரசியல்வாதிகள் போலியான வாக்குறுதிகளை அளிக்கின்ற போதிலும் அவை நிறைவேற்றப்படுவதில்லை.
மஸ்கெலிய பிரதேசத்தின் தோட்டங்கள் மற்றும் கிராமங்களின் வீதிகள் சேதமடைந்துள்ளன. இவற்றை எந்தவொரு அரசியல்வாதிகளும் திருத்திக் கொடுக்கவில்லை.
தற்போதைய அரசாங்கம் நாட்டின் பல பகுதிகளில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்த போதிலும் மஸ்கெலிய பிரதேசத்திற்கு எவ்வித அபிவிருத்தித் திட்டங்களையும் மேற்கொள்ளவில்லை.
எனவே இம்முறை வாக்கு சேகரித்து வரும் அரசியல்வாதிகளுக்கு தக்க பாடம் புகட்டத் தீர்மானித்துள்ளோம் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய மாகாணசபைத் தேர்தலில் இம்முறை வாக்களிக்கப் போவதில்லை என மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தொழிற்சங்க அமைப்புகளை கட்டியெழுப்பாது போனால் இடதுசாரி அரசியலுக்கு எதிர்காலமில்லை: டீயூ. குணசேகர
தொழிற்சங்க அமைப்புகளை கட்டியெழுப்பாது போனால் இடதுசாரி அரசியலுக்கு எதிர்காலம் இல்லை என்று இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டியூ. குணசேகர தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது தொழிற்சங்களில் 10 வீதமான உறுப்பினர்களே அங்கம் வகிக்கின்றனர். ஏனையோர் முதலாளித்துவ அரசியல் கட்சிகளில் அங்கம் வகிக்கின்றனர்.
தொழிற்சங்கங்களின்றி, மக்களின் போராட்டங்களுக்கு தலைமைத்துவத்தை வழங்க முடியாது. உரிய தலைமைத்துவம் இல்லாத காரணத்தினால் அவ்வப்போது ஏற்படும் மக்கள் எழுச்சியானது உடனடியாகவே அடங்கி விடுகிறது.
உண்மையான தொழிற்சங்க அமைப்பின் ஊடாகவே தேர்தலில் வெற்றிபெற முடியும். குறுகிய அரசியல் பேதங்களை மறந்து தொழிற்சங்க தலைவர்கள் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துள்ளது என்றார்.
'வே புரதம்' தொடர்பாக துரித பரிசோதனை - உள்நாட்டு பால் உற்பத்தியை மேம்படுத்த வலியுறுத்தல் - இலங்கையில் ரசாயன பரிசோதனை வசதியில்லை என்ற குற்றச்சாட்டு மறுப்பு
[ புதன்கிழமை, 14 ஓகஸ்ட் 2013, 06:05.34 AM GMT ]
வே புரதம் (Whey Protine) உள்ள பால்மா வகைளில் பக்றீரியா உள்ளடங்கி இருக்கின்றமையை கண்டறியும் பரிசோதனை செயற்பாடுகளை துரித கதியில் நிறைவுறுத்துமாறு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த பரிசோதனைகளை பொரள்ளையில் உள்ள மருத்துவ பரிசோதனை நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.
அந்த நிலையத்திற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த போதே சுகாதாரத் துறை அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
வே புரோட்டின் கலந்த பால் மாவகைகளில் பக்றீரியா தாக்கம் மற்றும் இரசாயனப் பொருட்கள் கலப்பு தொடர்பில் மூன்று கட்ட பரிசோதனைகள் இடம்பெற்ற வருகின்றன.
இந்தநிலைமையில், பொதி செய்யப்பட்ட பசும்பாலை அதிக அளவில் சந்தைப்படுத்துமாறு, குறித்த சில நிறுவனங்களுக்கு கால்நடைவள அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மா வகைகள் சந்தையில் இருந்து நீக்கப்படவுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
டி.சீ.டி எனப்படும் இரசாயண பொருட்கள் உள்ளடக்கப்பட்ட நிலையில், இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மா வகைகள் பலவற்றை சந்தையில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இலங்கையில் ஏற்பட்டுள்ள பால் மா தொடர்பான சிக்கலை தீர்ப்பதற்கு, உள்நாட்டு பால் உற்பத்திகளை அதிகரிக்குமாறு, இலங்கை அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் கோரியுள்ளது.
ரசாயன பரிசோதனை வசதி இல்லை என்கின்ற குற்றச்சாட்டை கைத்தொழில் தொழிநுட்ப நிறுவனத்தின் பணிப்பாளர் மறுப்பு
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பால் மா வகைகளில் டி.சி.டி என்ற இரசாயனப் பொருள் கலக்கப்பட்டதா என பரிசோதனை செய்வதற்கான வசதிகள் இலங்கை கைத்தொழில் தொழிநுட்ப நிறுவனத்திடம் இல்லை என குற்றச்சாட்டை அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் சிறிமால் பிரேம்குமார நிராகரித்துள்ளார்.
பால் மா வகைகளில் டிசிடி (DCD அல்லது Dicyandiamide) எனும் இரசாயனப் பொருள் கலக்கப்பட்டடுள்ளதாக குறிப்பிட்டு பால் மா வகைகள் தற்காலிகமாக பாவனையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன.
இது பற்றி சிங்கள ஊடகமொன்றுக்கு நேற்று அவர் அளித்த செவ்வியிலேயே இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
கலந்துரையாடல் பாணியில் இடம்பெற்ற சந்திப்பில் இலங்கை தொழிநுட்ப நிறுவனத்தின் பணிப்பாளர் சிறிமால் பிரேம்குமார, அரச வைத்திய அதிகாரிகள் சங்க தலைவர் அநுருத்த பாதெனிய, நேச்சர் சீக்ரெட் நிறுவன தலைவர் சமந்த குமார ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
தமது நிறுவனம் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனம் எனவும் பிரேம்குமார இதன்போது சுட்டிக் காட்டினார்.
அவுஸ்திரலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகை ஒன்றில் நச்சுப் பொருள் கலக்கப்பட்டிருந்தை இலங்கை கைத்தொழில் தொழிநுட்ப நிறுவனத்தினாலே கண்டறியப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் உலகில் வேறு எந்தவொரு நாட்டிலும் அதற்கான வசதி இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten