[ செவ்வாய்க்கிழமை, 13 ஓகஸ்ட் 2013, 02:29.30 AM GMT ]
2012ம் ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் 9622 சீன சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர்.
கடந்த மூன்று ஆண்டுகளில் இலங்கையிடம் இருந்து இந்தியா ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி தெரிவித்தார்.
2013ம் ஆண்டின் முதல் ஆறு மாத காலப் பகுதியில் 16582 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.
ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுச் செல்வதாக சுற்றுலாத்துறை மேம்பாட்டு நிறுவனத்தின் துணைப் பணிப்பாளர் யுவராஜ் அத்துகோரல தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் நாட்டுக்குள் சீனர்கள் பிரவேசித்து பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சீனர்கள் இலங்கையை ஆக்கிரமித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
குறிப்பாக நாட்டின் தொழிற்சந்தையில் சீனர்களின் தலையீடு அதிகரித்துள்ளதாகவும் எதிர்காலத்தில் உள்நாட்டுப் பிரஜைகள் மேலும் வேலையில்லாப் பிரச்சினையால் திண்டாட நேரிடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையிடம் இந்தியா ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளது!- பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி
[ செவ்வாய்க்கிழமை, 13 ஓகஸ்ட் 2013, 02:33.59 AM GMT ]
இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, நேற்று பதில் அளிக்கையிலேயே, பாதுகாப்பு அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளில், இந்தியாவின் முப்படைகளுக்கும் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆயுதங்களை வாங்குவதற்கு 2.35 லட்சம் கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ரஸ்யா, இஸ்ரேல், அமெரிக்கா, பிரித்தானியா, போலந்து, சுலோவாக்கியா, பின்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்தே இந்த ஆயுதங்கள் வாங்கப்பட்டுள்ளன.
ரஸ்யாவில் இருந்தே ஆகக் கூடுதலாக, ஒரு இலட்சம் கோடி ரூபாவுக்கு ஆயுதங்களை வாங்கியுள்ளது இந்தியா.
2010 தொடக்கம் 2013 வரையான காலப்பகுதியில், இந்திய இராணுவத்துக்கே அதிகளவில், ஆயுதங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதற்காக 1.92 இலட்சம் கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது.
அதேவேளை, இலங்கையில் இருந்து எத்தகைய ஆயுதங்கள் வாங்கப்பட்டன, அதற்காக செலவிடப்பட்ட தொகை எவ்வளவு என்ற தகவல் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிடவில்லை.
Geen opmerkingen:
Een reactie posten