'பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் பிரிக்கப்பட்டதுபோல இலங்கையில் இருந்து தமிழீழத்தை பிரித்து தனி நாடாக மாற்ற ராஜீவ்காந்தி முயற்சி செய்தார். ஆனால் ஈழத்தைப் பிரித்தால் நான்தான் அங்கு ஜனாதிபதியாக இருப்பேன் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அடம்பிடித்ததால்... தமிழீழத்தை தனியாக பிரிக்க முடியாமல் போய்விட்டது' என்று இந்திய மத்திய முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தகவல் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள அவர், 'இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான கட்சி காங்கிரஸ் என்று தவறான கருத்து பரப்பப்படுகிறது. நேரு பிரதமராக இருந்ததில் இருந்து இன்று வரை இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதற்காக காங்கிரஸ் கட்சி பாடுபடுகிறது.
ஆனால் வரலாறு தெரியாத இந்த அரசியல் கோமாளி , தேசிய தலைவர் நான் தான் ஜனாதிபதியாக இருக்கவேண்டும் என்று அடம்பிடித்தார் என்று கூறியுள்ளார். எந்தக் காலத்தில் எமது தேசிய தலைவார் பதவிக்காக அலைந்து திரிந்தார் ? பேயரும், புகழும், தலைவர் என்னும் அந்தஸ்த்தும், அவரை தானாகத்தேடியே வந்தது. பதவிக்காக அவர் ஆசைப்பட்டிருந்தால், அரசுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, இன்று கட்சி அல்லவா நடத்திக்கொண்டு இருந்திருப்பார். காங்கிரஸ் கட்சியில் நக்கிப் பிழைக்கும் இளங்கோவனுக்கு இது எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லையே. அதனால் தனக்கு எட்டிய கற்பனைகளை கட்டவிழ்த்து விடுகிறார் போலும் !
Geen opmerkingen:
Een reactie posten