இஸ்ரேலின் வடக்கு நகரங்களில், ரசாயன தாக்குதலில் இருந்து பாதுகாப்பு கொடுக்கும் கேஸ் தடுப்பு முகமூடிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. மொத்தம் 800 பாடசாலைகள், 2,800 சிறார் பள்ளிகளில் திங்கட்கிழமை பாதுகாப்பு பயிற்சிகள் கொடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எந்த நிமிடமும் தாக்குதல் நடக்கலாம் என்ற பதட்டம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா சிரியா மீது தாக்குதல் நடத்தியே தீருவேன் என்ற நிலையில் உள்ளது. ஐ.நாவின் பாதுகாப்பு சபையின் அங்கிகாரம் இருந்தால் மட்டுமே ஒரு நாடு மீது தாக்குதல் நடத்த முடியும். பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரம் கொண்ட நாடுகளில் ஒன்றான ரஷ்யா, இதற்கு தொடர்ந்து கடும் எதிர்பு தெரிவித்து வருகிறது. இதற்கு ஒரு காரணமும் உண்டு. அதாவது சிரியாவில் இருந்து ரஷ்யாவுக்கு மசகெண்ணை(பெற்றோலியப் பொருட்கள்) மலிவான விலையில் கிடைக்கிறது. அதுவே சிரியாவை ரஷ்யா ஆதரிக்க காரணமாக உள்ளது.
ஆனால் தற்போது சவுதி அரேபியா, ரஷ்ய அரசுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி தாம் மலிவான விலையில் எரிபொருட்களை அனுப்புவதாக கூறியுள்ளது. இதனால் அமெரிக்கா இனி தாக்குதல் நடத்தலாம் என்ற நிலை தோன்றியுள்ளது. அமெரிக்க உளவுத்துறை சிரியாவின் இராணுவ நிலைகள் அனைத்தையும் துல்லியமாக குறிவைத்துள்ளது. அமெரிக்க விமானப்படை விமானங்கள் 1 நாள் தாக்குதல் நடத்தினால் போதும். சிரியாவின் 50% இராணுவப் பலம் குறைவடையும் சாத்தியம் உண்டு. ஆனால் சிரியாவின் அதிபர் அசாத் லேசுப்பட்டவர் கிடையாது. நிச்சயம் இஸ்ரேல் மீதும் அமெரிக்க விமானங்கள் மீதும் எதிர் தாக்குதல் நடத்துவார். ஈராக் அதிபர் சதாம் ஓடி ஒளிந்தது போல அவர் செய்யமாட்டா என பலர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
Geen opmerkingen:
Een reactie posten