தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 26 maart 2014

எம்.எச். 370 விமானியுடன் தொலைபேசியில் உரையாடிய மர்மப் பெண் யார்? : நாஸாவும் தேடுதல் பணியில்

மர்மமான மலேஷிய விமானத்தினை தேடும் பணி சுமார் 17 நாட்கள் கடந்த நிலையில் எம்.எச்.370 விமானம் காணாமல் போய்விட்டது எனவும் அதில் பயணம் 239 பேரில் எவரும் உயிர்தப்பவில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மலேஷியா நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
தென் இந்தியக் கடலில் விமானம் மூழ்கியதில் எவரும் உயிர் பிழைக்கவில்லை. இத்தகவல்இ பயணிகளின் குடம்பங்களுக்கு மிகுந்த துயரத்துடனும் கவலையுடனும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மலேஷிய பிரதமர் நஜீப் ரஸாக்இ கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.ஆனாலும் விமானத்துக்கு என்ன நடந்தது? எங்குள்ளது என்ற விபரங்கள் தெரியவரவில்லை இதனால் தொடர்ந்தும் எம்.எச். 370 விமானத்தினை தேடும் பணி முன்னெடுக்கப்படுகின்றது.
தேடுதல் படலத்தில் 26 நாடுகள் பங்கெடுத்துள்ளதுடன் 55 கப்பல்களும் 57 விமானங்களும் 21 செய்மதிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. பல மில்லியன் டொலர்கள் செலவில் இத்தேடுதல் பணி 7.68 மில்லியன் சதுர கிலோ மீற்றர் பரப்பில் முன்னெடுக்கப்படுகின்றன.நேற்று வரையில் எட்டப்பட்ட புதிய பல சந்தேகங்களுடன் தொடரும் தேடுதல் பணிகள் பற்றிய தகவல் இவ்வாறு அமைந்துள்ளன. 12 ஆயிரம் அடி உயரத்தில் தாழ்வாகப் பறந்த விமானம் வியட்நாட்நாம் வான்பரப்பில் வைத்து ட்ரான்ஸ்பொன்டர்ஸ் தொடர்பினை விமானம் இழந்தது.
இதன் பின்னர் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானம் திடிரென தனது திசையை மாற்றி மலாக்கா நீரிணைக்கு மேலாகப் பறந்துள்ளதாக மலேஷிய இராணுவ ரேடரினூடாகத் தெரியவந்தது. ரேடர் தொடர்பையும் இழந்த பின்னர் விமானம் 12 ஆயிரம் அடி உயரத்தில் தாழ்வாகப் பறந்துள்ளதாக நேற்று தகல்கள் வெளியானது. ஆனால் எவ்வளவு தூரத்தில் எவ்வளவு நேரம் பறந்தது எனத் தெரியவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. தாழ்வாகப் பறக்க காரணம் என்ன? ரேடரிலிருந்து தப்பிக்க விமானம் தாழ்வாகப் பறந்து சென்றிருக்கலாம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் விமானத்தில் ஏற்பட்ட சடுதியான இயந்திரக்கோளாறு காரமாணவும் திசையை மாற்றி தாழ்வாகப் பறந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் தற்போது தெரிவிக்கின்றனர். ஒட்சிசன் குறைவு, வெடிப்பு, தீ என ஏதாவது காரணத்தில் விமானத்தினை விமானநிலையத்தில் தரையிறக்க விமானி முயற்சித்திருக்கலாம். இது குறிப்பிடத்தக்க பாரிய மாற்றம்.
ஆனால் எதுவும் உறுதியானது அல்ல எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இக்கருத்தினை முன்னாள் அமெரிக்கன் எயார்லைன்ஸ் விமானி மார்க் வெய்ஸ் மற்றும் முன்னாள் அமெரிக்க போக்குவரத்து பொதுப் பரிசோதகர் மேரி சியாவோ தெரிவித்துள்ளனர். விமானத்தின் மாற்றுப்பாதை திட்டமிடப்பட்டதா? ஆனால் விமானம் திசையை மாற்றிப் பறந்தது திட்டமிடப்பட்டது. போயிங் விமானம் பற்றி அறிந்தவர்களினால் மேற்கொளப்பட்டிருக்கலாம். விமானத்தின் பாதை ஏற்கனவே இயங்கு தொகுதியில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என மலேஷியா அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். ‘ஏ.சீ.ஏ.ஆர்.எஸ் எனும் தன்­னி­யக்க ரேடர் மற்றும் ரேடியோ சமிக்ஞை இறுதியாக அதிகாலை 1.07 மணிக்கு தகவல் அனுப்பியது.
இதன்படி விமானம் அப்போது பெய்ஜிங்கின் பாதையை நோக்கியே இருந்தது’ என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் கடத்தலுக்கான முயற்சியின் ஒரு அங்கமா? அல்லது அவசர நேர செயற்பாடா? என இன்னும் தெளிவாகவில்லை. தேடுதல் தீவிரமடைந்துள்ள பகுதி இதேவேளை அவுஸ்திரேலியாவின் பேர்த் நகருக்கு அண்மையில் தென் இந்து சமுத்திரத்தில் மிதக்கும் பொருள்கள் செய்மதி மூலம் தென்பட்டது ஆனாலும் அவை விமானத்தின் சிதைவுகளல்ல என பின்னர் தேடுதல் பணியில் தெரிவந்ததாக அவுஸ்திரேலியா தெரிவித்தது. இருப்பினும் அதேபிரதேசத்திலிருந்து 120 கிலோமீற்றர் தொலைவில் 74 அடி நீளமும் 43 அடி அகலமும் கொண்ட பாரிய பொருளொன்ற இருப்பது செய்மதி படங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
அப்பகுதியில் அவுஸ்திரேலியா தலைமையிலான தேடுதல்கள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. அத்துடன் கம்போடியா, லாவோஸ், சீனா என கஸகஷ்தான் வரையான நிலப்பரப்பிலும் தேடுதல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. தென் இந்து சமுத்திரத்திலுள்ள பிரான்ஸ் செய்மதியிலும் தென்பட்டன மேற்படி செய்மதிப் படங்கள் தெரிந்த அதேபகுதியில் பேர்த் நகரிலிருந்து 2,300 கிலோ மீற்றர் தொலைவில் மிதக்கும் சிதைவுகள் தென்பட்டதாகவும் உடனடியாக இத்தகவல் மலேஷியாவுக்கு அறிவிக்கபட்டதாகவும் பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் தேடுதலில் இப்பகுதி அதிக கரிசனைக்குட்பட்டுள்ளது. ஆனாலும் இதுவரையில் விமானத்தில் சிதைவுகள் எதுவும் அங்கு கண்டுபிடிக்கப்படவில்லை அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. தேடுதலில் நாஸா நாஸா செய்மதிகள் மூலம் தேடுதல் மேற்கொள்ள அடுத்த இரு நாட்கள் தேவைப்படும் என நேற்று நாஸா தெரிவித்துள்ளது.
ஏர்த் ஒப்ஸேர்விங் 1 போன்ற செய்மதிகள் மற்றும் சர்வதேச விண்வெளி நிலைய ஐ.எஸ்.ஈ.ஆர்.வி கெமரா மூலம் விமானத்தினை கண்டுபிடிக்க வாய்புகள் உள்ளதாகவும் நாஸா தெரிவித்துள்ளது. கடலுக்கடியில் தேட தயாராகும் அமெரிக்கா கடலுக்கடியில் தேடுதல் வேட்டை நடத்தும் சோனார் உபகரணங்களை எம்.எச். 370 தேடுதல் பணியில் பயன்படுத்த அமெரிக்காவை மலேஷியா கோரியுள்ளது. இதனை அமெரிக்கா கருத்திற்கொண்டுள்ளதாக பெண்டகன் கூறியுள்ளது.
அநேகமாக சிதைவுகள் தென்படுவதாகக் கூறப்படும் தென் இந்து சமுத்திரப் பகுதியில் சோனார் உபகரணம் விரைவில் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மர்மப்பெண் யார்? தேடுதல் விரிவடைந்துள்ள அதேவேளை கடத்தலுக்கு விமானி துணைபோனார் என்ற சந்தேகம் வலுவிழந்து வருகின்றது.
இந்நிலையில் எம்.எச். 370 விமானம் பறப்பதற்கு சற்று முன்னர் பிரதான விமானி ஷாவுடன் மர்மப் பெண்ணொருவர் 2 நிமிட தொலைபேசி உரையாடல் மேற்கொண்டுள்ளார். அத்தொலைபேசி இலக்கம் போலியான அடையாளப்படுத்தில் வாங்கப்பட்டுள்ளது தற்போது தெரியவந்தள்ளது. இதனால் அப்பெண் குறித்த விசாரணைகளில் விசாரணையாளர்கள் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.
4879MH0102
http://www.jvpnews.com/srilanka/63465.html

Geen opmerkingen:

Een reactie posten