தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 28 maart 2014

தேசிய ஒற்றுமைக்காக முஸ்லிம்கள் எப்போதுமே செயற்பட்டுள்ளனர்: பசில் ராஜபக்ச

தேசிய ஒற்றுமைக்காக முஸ்லிம்கள் எப்போதுமே செயற்பட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய ஒற்றுமைக்காக சகல சந்தர்ப்பங்களிலும் முஸ்லிம்கள் குரல் கொடுத்துள்ளனர்.
பலஸ்தீன மக்களை காலணித்துவ ஆட்சியாளர்கள் ஒடுக்க முயற்சித்த போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தைரியமாக அதற்கு எதிர்ப்பை வெளியிட்டார்.
இலங்கையின் சகல முஸ்லிம்களினதும் பாதுகாவலராக ஜனாதிபதி செயற்படுகின்றார். போர் நிறைவின் பின்னர் நாட்டில் சமாதானம் நிலைநாட்டப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து இன மக்களையும் ஜனாதிபதி ஒரே விதமாகவே நடாத்தி வருகின்றார் என அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten